Wednesday, October 28

Tag: vilangu

ஜீ5  தமிழ் ஒரிஜினல் வழங்கும் “விலங்கு” இணைய தொடர்!

ஜீ5  தமிழ் ஒரிஜினல் வழங்கும் “விலங்கு” இணைய தொடர்!

News
ஜீ5 தளமானது, அசத்தலான ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை சீரான இடைவெளியில் தந்து வருவதன் மூலம், ரசிகர்களிம் விருப்பமான தளமாக இருந்து வருகிறது.  ஜீ5 ன் அடுத்த ஒரிஜினல் வெளியீடாக வெளியாகிறது 'விலங்கு' இணைய தொடர். ரசிகர்களுக்காக பிரத்யேகமாக,  இயக்குனர்  பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள  "விலங்கு" ஜீ5 ஒரிஜினல் இணைய தொடர், பிப்ரவரி 18, 2022 வெளியாகிறது. இதன் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வினில் ஷுஜு பிரபாகரன், Cluster Head ZEE Network,  பேசியதாவது… ஜீ5 க்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி. எங்கள் கடந்த மாத வெளியீடான முதல் நீ முடிவும் நீ படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு வருட இடைவெளிக்கு பின், நாங்கள் விலங்கு மூலம் வெப் சிரீஸ் மீண்டும் கொண்டு வந்துள்ளோம். ஆனால் இதனை தொடர்ந்து இன்னும் நிறைய தொ...