Sunday, August 30

Tag: Viral Hits

வீடியோ பாடல் பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடித்த ‘ரௌடி பேபி’

வீடியோ பாடல் பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடித்த ‘ரௌடி பேபி’

News
யுவன் ஷங்கர் ராஜா எப்போதும் "வைரல் ஹிட்ஸ்" கொடுக்கும் இசை ஐகானாக தன்னை அடிக்கடி நிரூபித்து வந்திருக்கிறார். அவரது மெலோடி பாடல்களாகட்டும், மேற்கத்திய அதிரடி பாடல்களாகட்டும், லோக்கல் குத்துப் பாடல்களாகட்டும் எல்லாமே நம்முடைய விருப்பமான பாடல்களின் பட்டியல்களில் இடைவிடாமல் முக்கிய இடத்தை பிடித்தே வந்திருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஹிட் பாடல்களை (ராஜா ரங்குஸ்கி, பேரன்பு, சண்டக்கோழி 2 மற்றும் பியார் பிரேமா காதல்) வழங்கிய யுவன், ஆண்டின் இறுதியில் 'மாரி 2' படத்தின் மூலம் இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தை அளித்திருக்கிறார். குறிப்பாக 'ரௌடி பேபி' கடந்த ஆண்டில் தமிழ் சினிமாவின் பெரிய படத்தின் பிரமாண்ட பாடலாக மட்டுமல்லாமல், யூடியூபில் மிகவும் குறுகிய காலத்தில் (2 வாரம்) 100 மில்லியன் பார்வைகளை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது.   தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில், யுவன...