Monday, October 26

Tag: vishal.c

வைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘டாணா’!

வைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘டாணா’!

News
என்னதான் காமெடி கலந்த பேய் படங்கள் வந்து கொண்டே இருந்தாலும் ரசிகர்களுக்கு அதை பார்த்து சலிப்பே ஏற்படுவதில்லை. இயற்கையாகவே, ரசிகர்கள் பேய்க்கு பயந்து நடுங்கும் அடுத்த நொடியே, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடியை விரும்புகிறார்கள். இந்த கலவை தான் காமெடி பேய் படங்களின் சீசனை இன்னும் உயிர்ப்புடனேயே வைத்திருக்கிறது. ஆனால் அதை சரிவிகிதத்தில் கலந்து கொடுப்பது தான் சவாலான வேலை. அந்த வேலையை அர்ப்பணிப்புடன் செய்து இந்த வகை படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து அளிக்க தயாராகி வருகிறார் இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி.    "இந்த சூப்பர்நேச்சுரல் காமெடி படங்களின் வெற்றியே, நடுங்க வைக்கும் காட்சியாக இருந்தாலும் நம் உதடுகளில் சிறு புன்னகையையும், முதுகு தண்டில் சின்ன பயத்தையும் உண்டாக்குவதில் தான் அமைந்திருக்கிறது. இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி அதன் அடிப்படையை புரிந்து கொண்டு, தான் எழுதிய ஒர...