Friday, October 23

Tag: VJArchana

சின்னத்திரையில் சாதித்தவர் சினிமாவிலும் சாதிக்க வருகிறார்!

சின்னத்திரையில் சாதித்தவர் சினிமாவிலும் சாதிக்க வருகிறார்!

News
வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் வி.ஜெ.அர்ச்சனா. மிகக் குறுகிய காலத்தில் தன் நடிப்புத் திறமையால் லட்சோப லட்சம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா 2019ல் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன் கலைப் பயணத்தைத் தொடங்கியவர். அதன்பிறகு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் “ராஜா ராணி-2” என்ற தொலைக்காட்சித் தொடரில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிப்புத் திறமையால் தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு இல்லத்திலும் உள்ள தொலைக்காட்சித் தொடர் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதனைத் தொடர்ந்து ‘லவ் இன்சூரன்ஸ்’, ‘ட்ரூத் ஆர் டேர்’ ஆகிய குறும்படங்களில் நடித்துள்ளார். மேலும் “எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி” என்ற இணையத் தொடரிலும் (web series ) நடித்துள்ளார். அன்மையில் ’ஸோனி மியூசிக்’, இசையமைப்பாளர் தரண் குமார் இசையில் வெளியிட்ட ஒரு நிமிடப் பாடலா...