பிரமாண்டமான பான் இந்திய படம் ‘மட்கா’ VT14 பூஜையுடன் துவங்கியது
மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் மட்கா என பெயரிடப்பட்டுள்ள ,பான் இந்தியா திரைப்படம் #VT14 பூஜை விழாவுடன், பிரமாண்டமாக துவங்கியது
பலாசா திரைப்பட புகழ் கருணா குமார் இயக்கவுள்ள, மெகா பிரின்ஸ் வருண் தேஜின் 14வது படத்தை, வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரின் கீழ், மிகப்பெரும் பட்ஜெட்டில், மோகன் செருக்குறி (CVM) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா ஆகியோர் தயாரிக்கின்றனர். வருண் தேஜ் திரை வரலாற்றில் மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் இந்த #VT14 பிரமாண்ட திரைப்படம் இன்று ஹைதராபாத்தில் படக்குழுவினர் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது.
இவ்விழாவினில் சுரேஷ் பாபு மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் ஸ்கிரிப்டை இயக்குநரிடம் ஒப்படைத்து பணிகளை தொடங்கினார்கள். மெகா தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கிளாப் போர்டு அடிக்க, இயக்க...

