வைஜெயந்தி மூவிஸ் தொடங்கும் ‘வைஜெயந்தி மியூசிக்’
'வைஜெயந்தி மியூசிக்' எனும் இசை நிறுவனம் தொடங்கப்படுவதை பிரபல வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
1974 ஆம் ஆண்டில் தயாரிப்பாளர் சி. அஸ்வினி தத்தால் தொடங்கப்பட்டு, பின்னர் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமாக தெலுங்கு சினிமாவில் வளர்ச்சி அடைந்த படத் தயாரிப்பு நிறுவனம் வைஜெயந்தி மூவிஸ். இந்நிறுவனம் தெலுங்கு திரையுலகில் பல வெற்றிகரமான படைப்புகளை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் திரைத் துறை சார்ந்த தொழில்துறையில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து ஒத்துழைத்த தயாரிப்பு நிறுவனம் இது. இந்நிறுவனம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் பல திரைப்படங்களை தற்போது தயாரித்து வருகிறது.
இந்நிறுவனம் தொழில்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிறுவனம். இதனை கொண்டாடும் வகையில் இந்நிறுவனம் புதிதாக 'வைஜெயந்தி மியூசிக்' எனும் இசை நிறுவனத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. 50...

