அறிவியலும் கற்பனையும் நிறைந்த காதல் நகைச்சுவை படம்!
விக்னேஷ் கார்த்திக் தன்னுடைய திறமையால் ஒரு நடிகராகவும் இயக்குநராகவும் சின்னத்திரையில் திறம்பட பணிபுரிந்து பெரிய திரையிலும் தன்னை ஒரு திறமையான இயக்குநராக வெளிகாட்ட வருகிறார். இவர் இயக்குநராக அறிமுகமான “ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல” திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். பின்னர், “யுவர்ஸ் ஷேம்ஃபுலி 2” குறும்படம் அன்மையில் இவருக்கு பாராட்டுகளையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி தந்தது. திரைப்படத்துரையினர் மட்டுமல்லாமல் பலரிடமிருந்து நேர்மறையான பாராட்டுகளை பெற்று வருகிறார்.
“ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் இருந்தபோதிலும், இத்தகைய ஒரு வரவேற்பை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இந்த குறும்படம் ஒன்பது மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது என்பதை விட, திரைத்துறை நண்பர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் பாராட்டு பெற்றது தான் என்னை மகிழ்ச...
