“வால்டர்” இசை வெளியீட்டு விழா”
தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்க சிபிராஜ் நடிக்கும் “வால்டர்” படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார். சத்யராஜின் திரைவாழ்வில் புகழ்மிக்க படம் “வால்டர் வெற்றிவேல்”. தற்போது “வால்டர்”தலைப்பில் சிபிராஜ் காவல் அதிகாரியாக கலக்கியுள்ளார். திரில்லர் பாணியில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்ட வால்டர் தேவாரம் அவர்கள் பேசியது...
எனக்கு சினிமா அவ்வளவாக தெரியாது. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மூணாறு. அங்கிருந்தபோது சினிமா பற்றி எதுவும் தெரியாது. நான் சென்னை வந்த பிறகு எம் ஜி ஆர் ஆட்சியில் அதிகாரியாக இருந்தேன். ஒரு பிரச்சனையின் போது இந்திரா காந்தி தமிழகம் வந்திருந்தார். எங்கும் அவரது கூட்டம் நடத்த முடியாத போது என் தலைமையில் சென்னையில் கூட்டம் நடத்தினோம். எம் ஜி ஆர் அவர்க...
