“எனக்கு 26 உனக்கு 36” – புதுவித காதலைச் சொல்லும் வெப் சீரிஸ் ‘ஊர்வசி’!
தமிழ்த் திரையுலகில் எத்தனையோ காதல் கதைகள் வந்துள்ளன . காலம் ,கலாச்சார மாற்ற ஏற்ப மனிதரிடையே எழும் காதலும் அதன் போக்கும் மாறியுள்ளது.
காதலனைவிட காதலிக்கு வயது அதிகமாக இருந்தால் ஒரு காலத்தில் வியப்பூட்டியது. இது இப்போது சகஜமாகி வருகிறது.
சச்சின் டெண்டுல்கர் தொடங்கி கணவனை விட வயதில் மூத்த பெண் மனைவியாகி இணைவது அதிகரித்து வருகிறது.
26 வயது வாலிபனுக்கும் 36 வயது விவாகரத்தான மென்பொருள் துறைப் பெண்ணுக்கும் இடையே நடக்கும் உண்மையான காதலைச் சொல்வது தான் 'ஊர்வசி' வெப் சீரிஸ் .
வயது வித்தியாசம் இருப்பதால் வேறுகாரணங்களால் ஏற்பட்ட காதல் அல்ல இது. நியாயமாகவும் நேர்மையாகவும் ஒருவரை ஒருவர் மதித்து ஒருவருக்கொருவர் நேசம் காட்டும் காதலாக இது சொல்லப்படுகிறது.
சென்னையில் ஒரே அறையில் தங்கி இருக்கும் நான்கு நண்பர்களில் ஒருவர் தான் கதாநாயகன். வாடகை டாக்சி ஓட்டும் ஒருவனுக்கும் அடிக்கடி அந்த டாக்சியில...
