“ட்ரிப்”படத்தின் அசத்தும் முதல் சிங்கிள் “what a life – u “ !
தமிழில் ஒர் புதுமையாக காமெடி, அட்வெஞ்சர் திரில்லர் திரைப்படமாக உருவாகும் “ ட்ரிப் “ திரைப்படம் படப்பிடிப்பு ஆரம்பமான நாள் முதலே அனைவரிடத்திலும் பெரும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. சமீபத்தில் வெளியடப்பட்ட டீசரும், டிரெய்லரும் ரசிகர்களிடம் அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல், திரையரங்கில் அட்டகாசமான கொண்டாட்டம் உண்டென, உத்தரவாதம் தந்துள்ளது. இந்த நிலையில் இப்போது வெளியாகியுள்ள முதல் சிங்கிள் பாடலான “what a life - u” பாடல் படத்தின் மீது இன்னும் அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“சிவப்பு, மஞ்சள், பச்சை” படப்புகழ் இசையமைப்பாளர் சித்து தந்துள்ள பெப்பியான இசை, கதாப்பாத்திரங்களின் குணாதிசயங்களை, தனது கொண்டாட்ட வரிகளில் புட்டு வைக்கும் மோகன் ராஜனின் வரிகள், கேட்டவுடன் பிடித்துபோகும் பாடகர் கானா பாலாவின் குரல், அட்டகாச கலவையாக உருவாகியுள்ள இந்த “what a life - u” பாடல் ரசிகர்களுக்கு பெரு விருந்தாக...
