டிஸ்கவரி தொலைகாட்சி தயாரிப்பில் ரஜினி பங்கு பெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சி!
அகில உலக அளவில் புகழ் பெற்ற டிஸ்கவரி தொலைகாட்சி குழுமம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்துள்ளது.
டிஸ்கவரி தொலைக்காட்சியில் Man Vs Wild என்கிற நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று. இதில் Bear Grylls என்னும் சாகச வீரர், மயிர் கூச்செறியும் அற்புத சாகசங்களை அடர்ந்த காடுகளிலும், விலங்குகளுக்கு மத்தியிலும் செய்து, உலக முக்கிய பிரமுகர்களிடம் பேட்டி கண்டு நிகழ்ச்சியை நடுத்துவார். இதுவரை இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஹாலிவுட் நடிகைகள் ஜூலியா ராபர்ட்ஸ், கேட் வின்ஸ்லெட் ,டென்னிஸ் வீரர் ராஜர் பெடரர் , மற்றும் சென்ற வருடம் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்றுள்ளனர் .
பிரதமர் மோடியுடன் நடந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்றது. உத்தரகாண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய சரணாலயத்தில் இந்நிகழ்ச்சி படமாக்கப்பட்டது. இந்த சாகச பயணம் உலகெங்...
