Monday, September 28

Tag: Women in Cinema Collective

திரைத்துறை பெண்கள் கூட்டமைப்பின் இரண்டாம் ஆண்டு விழா!

திரைத்துறை பெண்கள் கூட்டமைப்பின் இரண்டாம் ஆண்டு விழா!

News
திரைத்துறை பெண்களின் கூட்டமைப்பான “வுமன் இன் சினிமா கலெக்டிவ்” ( Women in Cinema Collective / WCC) அமைப்பின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா கேரளாவில் எர்ணாகுளம் நகரில் நடைபெற்றது. ரேவதி, பார்வதி, பத்மப்ரியா, மஞ்சு வாரியர், அஞ்சலி மேனன் உள்பட மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி திரைத்துறை என இந்தியா முழுவதிலும் இருந்து பெண் படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் தொழில் நுட்ப கலைஞர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர். தென்னிந்திய திரைத்துறைப் பெண்கள் மையம் சார்பாக இயக்குநர் மாலினி ஜீவரத்னம், ஏஞ்சல் பிலோமினா, ஈஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர். சினிமாவில் பெண்கள், நடிகையர்களாக மட்டுமல்லாது துணை நடிகைகள், பாத்திரம் கழுவும் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள், பின்னனி நடன கலைஞர்கள் என எல்லாருக்கும் நிகழும் ஒரே மாதிரியான சுயமரியாதை இழப்பையும் அறமற்று பெண்களை உடல் சுரண்டல் செய்யும் சம உரிமையற்ற ஆண் மைய ...