கடலுக்கடியில் வெளியிட்ட ‘யானை’ படத்தின் போஸ்டர்!
நடிகர் அருண்விஜய் நடிப்பில் ஹரி இயக்கும் யானை படத்தில் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. குடும்ப கதையோடு ஆக்ஷன் கலந்து தயாராகும் இப் படத்தின் போஸ்டரை பாண்டிச்சேரியை சேர்ந்த அருண்விஜய் ரசிகர்கள் கடலுக்கடியில் வித்தியாசமான முறையில் வெளியிட்டார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
*இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் "யானை".
*தமிழ் சினிமாவில் கிராமங்கள் முதல் நகரம் வரை அனைவரும் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் தருபவர் இயக்குநர் ஹரி. தமிழின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து மிகப்பெரிய வெற்றிப்படங்களை தந்த இவர் தற்போது தொடர் வெற்றிகளால் முன்னணி நாயகனாக மிளிர்ந்து வரும் நடிகர் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து ஒரு படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார்கள். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் ‘சிங்கம்’ பம்பர் ஹிட்டானது இந...
