அமெரிக்காவில் எடுக்கப்பட்ட தமிழ் இசை ஆல்பம்!
ஏலேலோ : அமெரிக்காவில் எடுக்கப்பட்ட தமிழ் இசை ஆல்பம்!
அமெரிக்காவில் ' ஏலேலோ' என்கிற தமிழ் இசை ஆல்பம் உருவாகி இருக்கிறது. இதில் இந்திய ,அமெரிக்கக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
உலகமயமாக்கல் மற்றும் ஊடக வளர்ச்சியின் காரணமாக இப்போது உள்ளூர் மொழியான தமிழுடன் உலகமொழி ஆங்கிலமும் கலந்து பேசிப் புழங்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் தமிழ் ஆங்கிலம் இணைந்த ஆல்பமாக 'ஏலேலோ' உருவாகியிருக்கிறது.
இது ஒரு தமிழ் ஆல்பம் தான் என்றாலும் ஆங்கிலமும் கலந்து வருவதால் இதை மொழி கடந்து பலராலும் ரசிக்கப்படும் என்று நம்புகிறது தயாரிப்புக்குழு.
இந்த ஆல்பத்தில் ஜாய்ஸ் ஜான், ஜெய் மட்,அலிஷா தாமஸ் ஆகியோர் பாடியுள்ளார்கள்.
இது 'மியூசிக் 247' ( Muzik 247)யூடியூப் சேனலில் இன்று வெளியாகி இருக்கிறது.
இந்த 'ஏலேலோ' தமிழ் ரொமாண்டிக் ...
