Tag: YenPeyarAnandhan
சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்ற திரைப்படம் ‘என் பெயர் ஆனந்தன்’
கனகா வெங்கடேசன், சவீதா வெங்கடேசனின் சவீதா சினி ஆர்ட்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணப்பாவின் காவ்யா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்'. இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர் ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம்பெற்ற ஆறு அத்தியாயங்களில் ஒன்றான ‘சித்திரம் கொல்லுதடி’ படத்தை இயக்கியவர். இவரது இரண்டாம் படம் தான் ‘என் பெயர் ஆனந்தன்’.
‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘தாயம்’ ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க, அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் அடுத்த சாட்டை, நாடோடிகள்-2 ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். மேலும் தீபக் பரமேஷ், அரவிந்த் ராஜகோபால் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தின் கதை ஆரம்பத்தில் த்ரில்லராக பயணித்தாலும், போகப்போக உணர்வுப்பூர்வமான பயணத்துக்குள் ரசிகர்களை அழைத்து சென்றுவிடும். க...

