ஹாரர்-த்ரில்லர் வகைப் படங்களுக்காகவே தொடங்கப்பட்டநைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ்’!
ஹாரர்-த்ரில்லர் வகைப் படங்களுக்காகவே பிரத்யேகமான தயாரிப்பு நிறுவனமாக‘நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ்’ தொடங்கப்பட்டுள்ளது!
17 ஆகஸ்ட் 2023
YNOT ஸ்டுடியோஸின் CEO & தயாரிப்பாளரான சக்ரவர்த்தி ராமச்சந்திரா, ஹாரர்-த்ரில்லர் வகை திரைப்படங்களை மட்டுமே தயாரிப்பதற்காகவே பிரத்யேக தயாரிப்பு நிறுவனமான நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸை தொடங்கியுள்ளார்.
ராமச்சந்திரா 2016-ஆம் ஆண்டு YNOT ஸ்டுடியோவில் இணைவதற்கு முன்பு வரை பத்து வருடங்களுக்கும் மேலாக ஒரு சுயாதீன தயாரிப்பாளராக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. YNOT ஸ்டுடியோஸின் நிறுவனரும், தயாரிப்பாளருமான S. சஷிகாந்த், ராமச்சந்திராவுடன் ‘நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ்’ -ல் பங்குதாரராக தற்போது இணைந்திருக்கிறார். கடந்த 7 வருடங்களாக சஷிகாந்த் மற்றும் ராமச்சந்திரா இருவரும் இணைந்து பெரும் வெற்றிப் படங்களை தயாரித்துள்ளனர்.
நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸின் நிறுவனர் மற்றும் தயாரி...
