“மறுபிறந்தாள்” யுவன் சங்கர் ராஜா U1 Records அறிமுகப்படுத்தும் இசை ஆல்பம்!
யுவன் சங்கர் ராஜாவின் U1 Records நிறுவனம் தொடர்ச்சியாக புதிய இசையை, புத்தம் புது திறமைகளை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம் தான் ஷஹானி ஹஃபீஸ்ன் “மறுபிறந்தாள்” ( அவளது மறுபிறப்பு ). யெல்தோ P ஜான் இசையில் ருக்ஷீனா முஸ்தபா வரிகளில் அம்மா, மகள் கூட்டணியான Dr ஷஹானி ஹஃபீஸ்,ரெஹயா ஃபாத்திமா பாடியுள்ள வீடியோ பாடலே “மறுபிறந்தாள்”. Dr ஷஹானி ஹஃபீஸ் இந்த இசை ஆல்பத்தின் திரைவடிவத்தின் கருவை உருவாக்கி, தயாரித்துள்ளார். மேலும் ஆதர்ஷ் N கிருஷ்ணாவுடன் இந்த இசை ஆலபத்தை இயக்கியுள்ளார் Dr ஷஹானி ஹஃபீஸ்.
பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட், சமூக செயற்பாட்டாளர், மேடை நாடக கலைஞர், திருநங்கை ரெஞ்சு ரெஞ்சிமார், ரோஸ் ஷெரீன் அன்சாரியுடன் இணைந்து நடித்திருக்கும் இந்த ஆல்பம் பாடல், திருநங்கை தாயுக்கும் அவரது வளர்ப்பு மகளுக்கும் உள்ள உறவை மையப்படுத்தி உருவாகியுள்ளது....
