Saturday, September 19

Tag: YuvanShankarRaja

25 ஆண்டுகளாக வெற்றிப் பயணத்தைத் தொடரும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா!

25 ஆண்டுகளாக வெற்றிப் பயணத்தைத் தொடரும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா!

News
தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை கடந்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இன்றைய இளைஞர்களுக்கு தனிமை, வலி, போதை, ஏக்கம், பரவசம், ஆறுதல் என யுவன் தான் அனைத்தும். தமிழ் சினிமாவில் கணக்கிலடங்கா வெற்றிப்பாடல்களை தந்த யுவன் சங்கர் ராஜா 25 ஆண்டுகளை கடந்ததையொட்டி, பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து அவர்களுடன் தன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். இந்நிகழ்வில் "25 ஆண்டுகளாய் யுவன்"-நிகழ்ச்சியில் பாடகர்கள்: விஜய் சேதுபதியின் தர்மதுரை திரைப்படத்தில் "ஆண்டிப்பட்டி கணவாக் காத்து" பாடலை பாடிய பாடகர் செந்தில்தாஸ் வேலாயுதம், சாம்.பி.கீர்த்தன், வேலு,சுஜாதா வெங்கட்ராமன்,லேகா( Lega sri),பேபி.அதிரா ஆகியோர் இளையராஜா மற்றும் யுவன் சங்கர்ராஜா பாடல்கள் அடங்கிய இசை நிகழ்வை அரங்கேற்றி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியதாவது…. இவ்வளவு நாள் என்னோட பயண...
‘எனக்கு திருப்தி தந்த படம் ‘ஹீரோ’” – யுவன் சங்கர் ராஜா!

‘எனக்கு திருப்தி தந்த படம் ‘ஹீரோ’” – யுவன் சங்கர் ராஜா!

News
“ஹீரோ” படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை பற்றி பேசும்போது  படக்குழு மொத்தமும் திவீர ரசிக மனப்பான்மைக்கு போய்விடுகின்றனர். அனைவருமே அவரின் இசைக்கு மயங்கி அவரது பின்னணி இசையையும், பாடல்களையும் வானளாவ புகழ்கின்றனர். ஆனால் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவோ இதற்கு நேர்மாறாக கூறுகிறார். எனது இசை படத்திற்கு மிகப்பெரும் பலமென மொத்த படக்குழுவும் கூறுகிறார்கள் ஆனால் அது முற்றிலும் உண்மையில்லை. படம் உருவாகி வந்திருக்கும் விதத்தை கண்டு நான் பிரமித்துபோய்விட்டேன். படத்தின் ஒவ்வொரு துளியிலும், பங்கேற்றிருக்கும் அத்தனை உறுப்பினர்களும், தங்கள் உடலாலும் ஆத்மாவாலும் முழு உழைப்பை தந்து ஒரு மிகப்பெரும் அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள். என்னிடம் கதை சொன்னபோது இருந்ததை விட இப்போது மிகப்பிரமாண்டமான முறையில் இப்படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் எனக்கு வேறு வழியே இல்லை நான் எனது மிகச்...
‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்

‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்

News
திரைப்பட இயக்குநர் ஸ்ரீநாத்தின் 'அன்புள்ள கில்லி' படம் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகிறது. காரணம் நாயை மையப்பாத்திரமாகக் கொண்டு வழக்கமாக உருவாக்கப்பட்ட படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட முறையில் இது அமைந்திருப்பதுதான். கில்லி என்ற பெயர் கொண்ட லாபர்டார் வகை நாயின் பார்வையிலிருந்து இந்தக் கதை சொல்லப்படுவது மிகவும் புதுமையான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. படம் வளர்ந்து முழுமையடைந்ததிருப்பது குறித்து ஒட்டுமொத்த படக்குழுவும் முழு திருப்தியடைந்திருக்கும் நிலையில் இப்போது மற்றும் ஒரு கொண்டாட்டமான மனநிலைக்கு வந்திருக்கிறது படக்குழு. ஆம். இந்தப் படத்துக்காக அரோல் கரோலி இசையமைப்பில் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடியிருப்பதுதான் படக்குழுவினரை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்திருக்கிறது. இது குறித்து இயக்குநர் ஸ்ரீநாத் கூறியதாவது...  யுவன்...