ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை முன்னரே பார்க்க வேண்டுமா?
இந்தியாவின் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, வலிமையிலும், அந்தஸ்திலும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு அதிலிருக்கும் தரமான படைப்புகளே காரணம். தற்போது ஜீ5 தளத்தின் அடுத்த படி, அதன் சந்தாதாரர்களை கண்டிப்பாக உற்சாகப்படுத்தும்.
பிரபலமான இந்த ஓடிடி தளம், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் புகழை வைத்து, தமிழ் சந்தையில் தனது இருப்பை இன்னும் பலப்படுத்தவுள்ளது. தற்போது ஜீ5 க்ளப் என்கிற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பகுதிகளை, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்னரே கண்டு களிக்கும் அற்புதமான, செலவு குறைந்த வசதியை ஜீ 5 க்ளப் அதன் சந்தாதாரரகளுக்குத் தருகிறது.
இந்தச் சலுகையின் பல அம்சங்கள், இதைத் தனித்துவமானதாகவும், தவிர்க்க முடியாததாகவும் ஆக்குகிறது.
ஜீ5 க்ளப்புக்கான ஒரு வருட சந்தா தொகை வெறும் ரூ.365 மட்டுமே. இந்த மிகக் குற...
