ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் பாராட்டையும் ஒருங்கே பெற்ற ‘பிளட் மணி’
ஜீ5 OTT தளத்தில் டிசம்பர் 24 அன்று நேரடியாக வெளியான சஸ்பென்ஸ் டிராமா திரைப்படமான 'பிளட் மணி' (Blood Money) உலகமெங்கும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இயக்குனர் சர்ஜுன் KM இயக்கத்தில் ப்ரியா பவானி சங்கர், ஷிரிஷ், கிஷோர் நடிப்பில் வெளியான, 'பிளட் மணி' திரைப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்று, ஜீ5 OTT தளத்தில், அதிக எண்ணிக்கையிலான பார்வைகளை பெற்று, புதிய சாதனைகள் படைத்து வருகிறது.
‘பிளட் மணி’ (Blood Money) திரைப்படம் சமூகத்தில் ஊடகங்களின் பங்கு எவ்வளவு முக்கியம் என கூறும் படைப்பாக உருவாகி பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது, பிளட் மணி திரைப்படம், ஊடகங்களின் உண்மையான சக்தியை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படமாக வந்துள்ளது.
ஒரு அற்புதமான கதையுடன், சமூகத்தின் மீதான அழுத்தமான கேள்வியுடன், எளிய மனிதர்களின் வலியை சொல்லும் படைப்பாக, இப்படம் இரு...
