தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு திரைஅரங்க உரிமையாளர்களையும் நேரடியாக சந்தித்து தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக நாளை (12/04/18) வியாழன் மாலை 5 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
நடக்கவிருக்கும் இந்த முக்கிய கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாட்டில் உள்ள திரைஅரங்க உரிமையாளர்களான சகோதர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இப்படிக்கு
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.