விஷாலின் வீரமே வாகை சூடும் முன்னோட்டம் செய்த சாதனை

0

 59 total views,  1 views today

வெளியான 15 நிமிடத்தில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி சாதனை படைத்துள்ளது விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தின் டிரைலர்.

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளைக் கொண்டு வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்த படத்தை து. பா சரவணன் என்பவர் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹையாதி நடித்துள்ளார். மேலும் யோகி பாபு உள்பட பல நடிகர், நடிகைகள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியான நிலையில் வெளியான 15 நிமிடங்களில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி சாதனை படைத்துள்ளது.

இந்த படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, என் பி ஸ்ரீகாந்த் என்பவர் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

http://bit.ly/VVSOfficialTrailer

Share.

Comments are closed.