‘வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் இறுதி டிரெய்லர்!

0

Loading

வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் இறுதி டிரெய்லர் வெளியாகியுள்ளது!

த்ரில்லிங், மகிழ்ச்சி மற்றும் இன்னும் கூடுதலான ஆக்‌ஷனுடன் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் மார்வெல் திரைப்படங்களில் ஒன்றான ‘வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ வெளியாகிறது. இந்தியாவில் அக்டோபர் 25 ஆம் தேதி 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டி-யில் படம் வெளியாகிறது.

‘வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’-ல் டாம் ஹார்டி வெனோமாக மீண்டும் வருகிறார். மார்வெல் டிரையாலஜியின் இறுதித்தொகுப்பு இது. மார்வெலின் மிகச்சிறந்த மற்றும் மிகவும் சிக்கலான கதாபாத்திரங்களில் ஒன்று வெனம். எடி மற்றும் வெனோம் இருவரின் உலகங்களிலும் நடக்கும் பல்வேறு விஷயங்களால் தவிர்க்க முடியாத ஒரு முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். இது வெனோம் மற்றும் எடி என்ற ஆண்டி ஹீரோ ஃப்ரான்சைசிஸின் மறக்க முடியாத இறுதிப் பயணமாக ‘வெணோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ இருக்கும்.

இப்படத்தில் டாம் ஹார்டி, சிவெடெல் எஜியோஃபர், ஜூனோ டெம்பிள், ரைஸ் இஃபான்ஸ், பெக்கி லு, அலன்னா உபாச் மற்றும் ஸ்டீபன் கிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். ஹார்டி மற்றும் மார்செல் ஆகியோரின் கதையை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதிய கதையிலிருந்து கெல்லி மார்செல் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். படத்தை அவி ஆராட், மாட் டோல்மாக், எமி பாஸ்கல், கெல்லி மார்செல், டாம் ஹார்டி மற்றும் ஹட்ச் பார்க்கர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Sony பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட் இந்தியா இந்தப் படத்தை, அக்டோபர் 25, 2024 அன்று இந்தியத் திரையரங்குகளில் வெளியிடுகிறது. ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டி-யிலும் படம் வெளியாகிறது.

Witness the epic conclusion in #Venom: The Last Dance – exclusively in cinemas on October 25, also in 3D and IMAX 3D in English, Hindi, Tamil & Telugu.

 

Share.

Comments are closed.