Thursday, December 18

‘ஹாட் ஸ்பாட் 2much’ படத்தை விஷ்ணு விஷால்!

Loading

KJB டாக்கீஸ் தயாரிக்கும் ஹாட் ஸ்பாட் 2much படத்தினை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் (Vishnu Vishal Studios ) நிறுவனம் வழங்குவதை பெருமிதமாக கருதுகிறோம்!

*நடிகை ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2much படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*

*KJB டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‌’ஹாட் ஸ்பாட் 2much ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*

*’ஹாட் ஸ்பாட் 2much – முதல் பாகத்தை விட எதிர்பாராத மற்றும் சுவாரஸ்யமான திருப்பங்கள் கொண்ட ஃபேமிலி என்டர்டெய்னர்*

நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2much படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர், நடிகைகளின் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வித்தியாசமான மற்றும் கவனம் ஈர்க்கும் காணொலி வடிவிலும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹாட் ஸ்பாட் 2much எனும் திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர், ரக்சன், பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ‘ஆதித்யா’ கதிர், விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவி – ஜோசப் பால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை யூ. முத்தையன் மேற்கொள்ள கலை இயக்கத்தை சண்முகம் கவனித்திருக்கிறார். ஜனரஞ்சகமான ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை KJB டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், நடிகருமான K.J. பாலமணிமார்பன் தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை நடிகர் விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் (Vishnu Vishal Studios) வழங்குகிறது.‌

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”ஹாட் ஸ்பாட் படத்தின் முதல் பாகம் ஆந்தாலஜி படமாக நான்கு கதைகள் இடம் பிடித்தது. ஹாட் ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தில் மூன்று கதைகள் உள்ளது. முதல் பாகத்தில் ஒரு இயக்குநர் தயாரிப்பாளரிடம் கதை சொல்வது போல் இருக்கும். அது இந்தப் படத்திலும் தொடர்கிறது. ஆனால் இதில் மூன்று வெவ்வேறான கதைகளை எதிர்பாராத மற்றும் சுவராசியமான திருப்பங்களுடன் விவரித்திருக்கிறோம்.
இந்த திரைப்படத்திலும் இயக்குநராக நடித்திருக்கிறேன். ஹாட் ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் அனைவரும் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் பொழுதுபோக்கு அம்சங்களும், சமூகத்திற்கு தேவையான கருத்துகளும் சமமாக இடம் பிடித்திருக்கிறது” என்றார்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளரும், நடிகருமான K.J. பாலமணிமார்பன் பேசுகையில், ” ஹாட் ஸ்பாட் படத்தின் முதல் பாகத்தின் முன்னோட்டம் வெளியானதும் படத்தைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் படம் வெளியானதும் அவை படத்தின் வெற்றிக்கு சாதகமான அம்சங்களாக மாறியது. அத்துடன் ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகம் பெரியவர்களுக்கான படமாக அமைந்திருந்தது. ஆனால் ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் வெகு ஜனரஞ்சகமாகவும் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் குறிப்பாக ஜென் ஜீ தலைமுறையினர் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்கும் படமாக உருவாகி இருக்கிறது. முதல் பாகத்தில் பேசப்பட்ட சமூகத்திற்கு அவசியமான கருத்துக்கள் இந்த இரண்டாம் பாகத்திலும் விவரிக்கப்பட்டிருந்தாலும் அவை ஜாலியாக சொல்லப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தை விட நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பிலும் , திரைக்கதையிலும் இரண்டு மடங்கு அதிகம். இதன் காரணமாகவே ‘ஹாட் ஸ்பாட் 2much’ படத்தை விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது. ‘ஹாட் ஸ்பாட் படத்தின் முதல் பாகத்தை பார்த்துவிட்டு பாராட்டிய விஷ்ணு விஷால், இரண்டாம் பாகத்தின் கதையை முழுவதுமாக கேட்டுவிட்டு அதைவிட சிறப்பாக இருக்கிறது என்றும், இதனை எங்களுடைய நிறுவனம் வழங்கும்’ என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்” என்றார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக காணொலி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்.. இப்படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெய்லர் , வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.