”சட்டப்பூர்வமாக வழக்கு தொடுப்பேன்” – MeToo விவகாரம் குறித்து தியாகராஜன்

0

 137 total views,  1 views today

MeToo விவகாரம் திரையுலகில் பெரிய புயலை ஏற்படுத்தியுள்ள நிலையில், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அபாண்டமானது, குற்றம் சாட்டியவரின் சமூக வலைத்தளப்பக்கங்கள் முடங்கியுள்ளன. அவர் எங்கேயிருந்து அவதூறு பரப்புகிறார் என்றே தெரியவில்லை, விரைவில் சட்டப்பூர்வமாக அவதூறு வழக்குத் தொடுப்பேன் என்று நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சம்பந்தப்பட்ட போர்க்களக்காட்சி எடுக்கும் போது நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், மருத்துவர்கள் என்று 3000 க்கும் மேற்பட்டோர் இரவுபகலாகப் பணியாற்றிக் கொண்டிருந்தோம். இயக்குநர் என்கிற முறையில், ஒவ்வொருவரின் பாதுகாப்பும் முக்கியமாகக் கருதி மூச்சுவிடக்கூட நேரமில்லாமல், பணியாற்றிக் கொண்டிருந்தேன்…
ஒரு சில நாட்களே பணியாற்றிய அவர் படப்பிடிப்பில் எடுத்து புகைப்படங்களுடன் மாயமாகிவிட்டார், அதன்பிறகு அவர் எங்கிருக்கிறார் என்பது கூடத்தெரியவில்லை. ..” என்றார்.

தயாரிப்பாளர் வராஹி பேசும் போது, ” இந்த விவகாரம் பிளாக்மெயிலுக்குத்தான் பயன்படும் என்று ஸ்ரீரெட்டி விவகாரத்திலேயே எச்சரித்தேன். அவர் பலர் மீதும் குற்றம்சுமத்திய நிலையில், சென்னையில் 3 கோடிக்கு வீடு வாங்கியிருக்கிறார், எப்படி..? ஆண்களைப் பாதுகாக்கவும் ஒரு இயக்கம் ஆரம்பிப்போம்..” என்றார்.

ராதாரவி பேசும் போது, ” மீ டூ இயக்கம் அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக கருப்பினப்பெண் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டது. சர்வதேச அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அது தொடர்ந்த நிலையில். நம்மூரில் குறிப்பாக திரைத்துறை சார்ந்தவர்களின் மீது அதிகமாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதன் நோக்கம் தெரியாமல்..

இதே தந்தி பேப்பர் நிறுவனர்களுக்கு ஒரு களங்கம் வந்தபோது, திரையுலகமே திரண்டு தோள் கொடுத்தது.

எங்கள் நடிகைகள்.மீது அவதூறு பரப்பியபோது நடிகைகளுக்காகப் பத்திரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது..

நான் நடிகர் சங்க பதவியில் இருந்தபோதே பெண்களைப் பாதுகாக்க, வாசுகி கமிஷனில் இருந்து ஒருவர் நியமிக்கப்பட்டார்.

திரைத்துறையினர் மீது குற்றச்சாட்டு எழும் போது, ஒரு சார்பாக நடந்துகொள்ளவேண்டாம். இருதரப்பிலும் விசாரித்து செய்தியாக வெளியிடுங்கள்.

சின்மயியை யாரோ ஏவுகிறார்கள், அந்தப்பெண் பாவம்.

இந்த விஷயத்தில் ஒத்துப்போவதும் குற்றமே. சொல்லவே கஷ்டமாக இருக்கிறது. ஆடத்தெரியுமா பாடத்தெரியுமா என்று கேட்பது மாதிரி இனி நீ வெர்ஜினா என்றும் கேட்கவேண்டியிருக்குமோ…

இந்த நிலை நீடித்தால் சினிமா மறுபடியும் நாடக காலத்திற்குச் சென்றுவிடும். ஆண்களே ஸ்த்ரீ பார்ட்/ பெண்வேடம் போடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

தியாகராஜன், அர்ஜுன் ஆகியோர் பல ஆண்டுகாலமாகத் திரையுலகில் இருக்கிறார்கள். இதுபோன்ற செய்திகளால் அவர்களது புகழுக்குக் களங்கம்.ஏற்படுவதுடன் அவர்கள் குடும்பத்தாரின் மனங்களும் புண்படும்..” என்றார்.

Share.

Comments are closed.