Tuesday, September 29

எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கும் ‘ரைட்டர்’ பட போஸ்டர்கள்!

Loading

ஒரு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மனதில் விதைத்து, அவர்களை படம் பார்க்கத் தூண்டச் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது அந்தப் படத்தின் போஸ்டர்கள். போஸ்டரிலேயே கதையின் கருவைச் சொல்லும் வகையில் வடிவமைப்பு செய்து முத்திரை பதிப்பார்கள் சில டிசைனர்கள்.

அந்த வகையில் ரைட்டர் படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமாத் துறையினரின் எதிர்பார்ப்புகளையும் எகிற வைத்திருக்கிறது. இப்படத்தின் டிசைன் பணிகளை கபிலன் மற்றும் சந்தோஷ் நாராயணன் செய்து வருகிறார்கள்.

காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரியும் ஒருவரின் வாழ்க்கையை குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் படம் பிடித்துக் காட்டுகிறது ரைட்டர் திரைப்படம்.

டைட்டில் வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்க, தரமான படங்களை மட்டுமே தொடர்ந்து தயாரிக்கும் இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.

கிறிஸ்துமஸ் வெளியீடாக இம்மாதம் 24ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.