Sunday, November 29

Author: admin

உத்தரப் பிரதேசத்தில் உருவாகும் திரைப்பட நகரம்!

உத்தரப் பிரதேசத்தில் உருவாகும் திரைப்பட நகரம்!

News
போனி கபூரின் முயற்சியால் சர்வதேச தரத்தில் உத்தரப்பிரதேசத்தில் திரைப்பட நகரம் உருவாகிறது! உத்தரப்பிரதேசத்தில் உருவாக இருக்கும் பிரம்மாண்டமான திரைப்பட நகரத்தின் முதல் கட்டப் பணிகளை தயாரிப்பாளர் போனி கபூரின் பேவியூ புராஜெக்ட்ஸ் தொடங்க உள்ளது. தயாரிப்பாளர் போனி கபூர் தலைமையிலான பேவியூ புராஜெக்ட்ஸ் எல்எல்பி, 18% வருவாய் பங்குடன் அதிக ஏலதாரராக உத்தரப்பிரதேசத்தில் பிரம்மாண்டமான திரைப்பட நகரம் உருவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டம் விரைவில் தொடங்க உள்ளது. முதல் கட்டத்தில் 13 முதல் 14 மேம்பட்ட திரைப்பட ஸ்டுடியோக்கள் மற்றும் 230 ஏக்கரில் ஒரு திரைப்பட நிறுவனம் ஆகியவை உருவாக உள்ளது. இந்த திட்டம் எட்டு ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும். நொய்டா செக்டார் 21 இல் உள்ள திரைப்பட நகரத்திற்கான லே அவுட் திட்டத்தை போனி கபூர் சமர்ப்பித்துள்ளார் என்பதை யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை...
மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று ‘குபேரா’!

மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று ‘குபேரா’!

News
'குபேரா' திரைப்படத்தின் மயக்கும் விதமான ட்ரான்ஸ் எனப்படும் சிறுமுன்னோட்டம் (Teaser) வெளியாகி சேகர் கம்முலாவின் சினிமா உலகத்திற்குள் ரசிகர்களை கொண்டு செல்வதுடன் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது! நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட "ட்ரான்ஸ் ஆஃப் குபேரா" எனப்படும் சிறுமுன்னோட்டம் (Teaser) விரைவில் வெளியாகவிருக்கும் 'குபேரா' படக்குழு சார்பில் வெளியிடப்பட்டு, தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலாவின் தனித்தன்மையான சினிமா உலகத்திற்குள் கொண்டு சென்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. திறமையான நடிகர்கள் பட்டாளமான தனுஷ், 'கிங்' நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் மற்றும் தலிப் தஹில் ஆகியோர் இடம்பெற்றுள்ள இந்த சிறுமுன்னோட்டம்(Teaser) சமூக வலைத்தளங்களை பரபரபாக்கி, ரசிகர்கள் மற்றும் திரைத்துறை சார்ந்தவர்களால் படம் திரைக்கு வருவதற்கு முன்பே நிச்சயம் வெற்றித் திரைப்படமாக இருக்கும் என்று தெரிவி...
விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

News
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா! இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வரும் ஜூன் 6 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘பரமசிவன் பாத்திமா’ வெளியாகிறது. இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்க சாயாதேவி, எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்கரவர்த்தி இசை அமைக்க, இசக்கி ...

‘ராஜ புத்திரன்’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

News
பிரபு  வெற்றி இணைந்து நடிக்கும் 'ராஜ புத்திரன்' திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா! கிரசென்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே. எம் .சபி தயாரிக்க, இளைய திலகம் பிரபுவும் வெற்றியும் தந்தை மகனாக நடிக்க, நாயகியாக கிருஷ்ண பிரியா நடிக்க . கோமல் குமார், மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, ஆர். வி .உதயகுமார் உடன் நடிப்பில் இப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ள படம் ராஜ புத்திரன் .ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்துள்ளார் . மவுஃபுல் ராஜா இசையமைத்ததுள்ளார். பாடல்களை வைரமுத்து, மோகன் ராஜன் எழுதியுள்ளனர். மே மாதம் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.விழாவில் படக்குழுவினருடன் திரையுலகப் பிரமுகர்கள் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் -விநியோகஸ்தர் கே .ராஜன், இயக்குநர் எஸ். . சந்திரசேகரன், நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர்கள் வசந்த்...
பிச்சைக்காரன் வெற்றிப் படத்துக்குப் பிறகு மீண்டும் இணையும் விஜய் ஆண்டனி இயக்குனர் சசி

பிச்சைக்காரன் வெற்றிப் படத்துக்குப் பிறகு மீண்டும் இணையும் விஜய் ஆண்டனி இயக்குனர் சசி

News
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் திரைப்படத்தில் விஜய் ஆண்டனியும் அவரது தங்கை மகன் அஜய் திஷானும் நாயகர்களாக நடிக்கிறார்கள் *சசி இயக்கிய 'சிவப்பு மஞ்சள் பச்சை' வெற்றிப் படத்தை தயாரித்த அபிஷேக் ஃபிலிம்ஸ் இரமேஷ் P. பிள்ளை புதிய திரைப்படத்தையும் தயாரிக்கிறார்* மாபெரும் வெற்றி பெற்ற 'பிச்சைக்காரன்' படத்தை தொடர்ந்து இயக்குநர் சசி மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைகிறது. இரட்டை நாயகர்கள் கொண்ட கதையாக உருவாகவுள்ள இந்த புதிய திரைப்படத்தில் விஜய் ஆண்டனி அவரது தங்கை மகன் அஜய் திஷான் உடன் நடிக்கிறார். சசி இயக்கிய மற்றுமொரு வெற்றிப் படமான 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படத்தை தயாரித்த இரமேஷ் P. பிள்ளை, அபிஷேக் ஃபிலிம்ஸ் பேனரில் இந்த புதிய திரைப்படத்தையும் தயாரிக்கிறார். 'லப்பர் பந்து' மற்றும் 'மாமன்' புகழ் சுவாசிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழ்நாட்டின் வட மாவட்டத்தில...
நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடிக்கும் மிஸஸ்&மிஸ்டர் ( Mrs & Mr)

நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடிக்கும் மிஸஸ்&மிஸ்டர் ( Mrs & Mr)

News
நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, நடிக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா! நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் ( Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி. ராஜபாண்டி - விஷ்ணு ராமகிருஷ்ணன் - டி.ஜி. கபில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். பாலகுரு படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திர...
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்தநாளை முன்னிட்டு இசை நிகழ்ச்சி!

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்தநாளை முன்னிட்டு இசை நிகழ்ச்சி!

News
  பாடலாசிரியர் திரு. நா.முத்துக்குமார் அவர்களின் 50வது பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு நடைபெற இருக்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ! தனது பாடல்களால் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் பாடலாசிரியர் திரு. நா.முத்துக்குமார் அவர்களின் பொன்விழா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற இருக்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி! அன்புக்குரிய தமிழ் திரையுலக நண்பர்கள், பத்திரிக்கை, ஊடகங்கள், மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் வணக்கங்கள். தமிழ் சினிமா பாடல்களை தனது எழுத்துக்களால் இலக்கியமாக்கிய பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் 50வது பிறந்தநாளினில், அவர் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் திரையிசைப் பாடல்களுக்கும் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக நடக்கவிருக்கும் மாபெரும் இசை நிகழ்ச்சியை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். தனது எழுத்தால் ஒரு தலைமுறைக்கே காதலையும், ஆறுதல்...
கலகலப்பான காதல் கதை ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’!

கலகலப்பான காதல் கதை ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’!

News
சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நாயகனாக நடிக்கும் கலகலப்பான காதல் கதை 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'! *மான்சி, ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, சோனியா போஸ், உதயதீப் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்* 'காதல் மட்டும் வேணா' திரைப்படத்தை இயக்கி நடித்த சமீர் அலி கான் தற்போது 'தமிழ் பையன் இந்தி பொண்ணு' எனும் படத்தை தயாரித்து இயக்குவதோடு நாயகனாகவும் நடிக்கிறார். சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் உருவாகும் இத்திரைப்படம் ஒரு கலகலப்பான காதல் கதை ஆகும். அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக மிகவும் ஸ்டைலான முறையில் இப்படத்தை வடிவமைத்திருப்பதாக சமீர் அலி கான் தெரிவித்தார். மான்சி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, அலி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமின், உதயதீப், கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். "திருச்சூர...