Sunday, November 29

Author: admin

44 நடிகர்களை வைத்து 41 நாட்களில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘வாஸ்கோடகாமா’!

44 நடிகர்களை வைத்து 41 நாட்களில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘வாஸ்கோடகாமா’!

News
நகுலுக்கு நான் அக்கா அல்ல அம்மா : நடிகை தேவயானி நெகிழ்ச்சிப் பேச்சு! 5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில் நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா.இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த ' வாஸ்கோடகாமா ' திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே. எஸ். ரவிகுமார்,நடிகை தேவயானி கலந்து கொண்டார்கள். விழாவில் நடிகை தேவயானி பேசும் போது, "முதலில் தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் எல்லா பாடல்களையும் பார்த்தேன். சுறுசுறுப்பாக, அழகாக, நல்ல பொழுதுபோக்கு அம்சத்துடன் அமைந்திருக்கின்றன. என் தம்பி நகுல் நடித்த பட விழாவில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறத...

மார்வெல் ஸ்டுடியோவின் டெட்பூல் & வால்வரின்

News
டெட்பூல் & வால்வரின் இறுதி டிரெய்லரில் லோகனின் மகள் ரிட்டர்ன், லேடி டெட்பூல் மற்றும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது! டெட்பூல் & வால்வரின் இறுதி கவுண்டவுன் தொடங்கி இருக்கும் இந்த வேளையில், மார்வெல் ஸ்டுடியோஸ் ஒரு இறுதி டிரெய்லருடன் பார்வையாளர்களை அசரடித்துள்ளது. பல ஆச்சரியங்கள், முக்கிய தருணங்களை வெளியிட்டது என இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆக்‌ஷன் என்டர்டெயினருக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது! படத்தின் டிரெய்லர் மற்றும் புரோமோக்களில் டெட்பூல் & வால்வரின் இருக்கிறார்கள் என்றால் அவர்களுடன் வேறு யாரெல்லாம் இருப்பார்கள் என்பதை நிச்சயம் பார்வையாளர்கள் யூகிக்க முடியும். இந்த மிகப்பெரிய சூப்பர் ஹீரோக்கள் சேர்ந்து வருவதை சீக்கிரம் திரையில் பார்க்க இருக்கிறோம். மார்வெல் ஸ்டுடியோவின் டெட்பூல் & வால்வரின் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜூலை 26 ...
“வள்ளியம்மா பேராண்டி” பாடல் வெளியீட்டு விழா !!

“வள்ளியம்மா பேராண்டி” பாடல் வெளியீட்டு விழா !!

News
தெருக்குரல் அறிவின் புதிய இசை ஆல்பம் "வள்ளியம்மா பேராண்டி" பாடல் வெளியீட்டு விழா !! தெருக்குரல் அறிவு எழுதி, மெட்டமைத்து, இசை வடிவமைத்து, சுயாதீன கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் புதிய இசை ஆல்பம் "வள்ளியம்மா பேராண்டி". இசை உலகில் கோலோச்சும் முன்னணி நிறுவனமான சோனி மியூசிக் (Sony Music) நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது. இந்த ஆல்பம் பாடல் வெளியீடு விழா, திரைப்பிரபலங்களுடன் ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் IAS சிவகாமி பேசியதாவது... அன்பு சகோதரர் அறிவுக்கு என் வாழ்த்துக்கள். அறிவுக்கும் என் குடும்பத்திற்கும் மிக நெருங்கிய உறவு உள்ளது. ஒரு முறை கேஜி குணசேகரனை என் ஊரிற்கு அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது என் அம்மா அவர் பாடல் கேட்டு அழுது விட்டார், அத்தனை உணர்வு மிக்கதாக அவர் பாடல் இருந்தது. அதே போல் இப்ப...

23 மணி, 23 நிமிடங்களில் எடுக்கப்பட்ட சாதனைப் படம் “பிதா”!

News
இந்திய திரைப்பட வரலாற்றில், 23 மணி நேரம், 23 நிமிடத்தில் எடுத்து முடிக்கப்பட்ட முதல் திரைப்படம் 'பிதா'! எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ் தயாரிப்பில், எஸ்.சுகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, தரமான சிறு முதலீட்டு திரைப்படங்களை தொடர்ந்து வெளியிடும் 'ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்' சார்பில், உலகெங்கும் வெளியிடுகிறார் ஜெனீஷ். காது கேளாத, வாய் பேச முடியாத பத்து வயது சிறுவன், கடத்தப்பட்ட தொழில் அதிபரையும், தனது அக்காவையும் திருவிழா பெருங்கூட்டத்தில் எப்படி காப்பாற்றுகிறான் என்பது தான் கதை. ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் திருவிழா கூட்டத்தில் திட்டமிட்ட குறித்த நேரத்தில் படப்பிப்பை நடத்தி, பலரின் பாராட்டை பெற்றுள்ளார் இயக்குனர் எஸ்.சுகன். ஒரே இரவில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் அம்மா, காதலிக்கும் அக்கா, தொழில் அதிபர் கடத்தல் என, குறுகிய ...
கபிலன் வைரமுத்து எழுதிய ‘ஆகோள்’ நாவல் அப்படியே நடக்கிறதா?

கபிலன் வைரமுத்து எழுதிய ‘ஆகோள்’ நாவல் அப்படியே நடக்கிறதா?

News
கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் நாவலில் வரும் டிஜிடல் அபொகலிப்ஸ்… எதிர்காலத்தில் நடக்கும் என சித்தரிக்கப்பட்டது தற்போது நடக்கிறது… உலகம் முழுக்க விண்டோஸ் மென்பொருள் பாதுகாப்பு சேவையில் ஏற்பட்ட குளறுபடியால் விமானம், வங்கி என பொதுமக்களின் அடிப்படை சேவைகள் முடங்கியிருக்கின்றன. இது தொழில் நுட்ப கோளாறா அல்லது திட்டமிட்ட இணையவெளி தாக்குதலா என்று வல்லுனர்கள் இந்த சூழலை விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் எழுத்தாளர் கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் என்ற நாவலில் 2032 ஆம் ஆண்டு ஜெல்லி என்ற வைரஸ் ஊடுருவி பொதுமக்களின் அத்தியாவசிய சேவைகள் முடக்கப்படுவது போல எழுதப்பட்டிருக்கிறது. டிஜிட்டல் அபோகலிப்ஸ் எனும் மெய்நிகர் காவுகோள் குறித்து கபிலன் எழுதியிருக்கிறார். தற்போது அதே போன்ற சூழல் உருவாகியிருப்பதால் கபிலன் வைரமுத்துவின் நாவலை வாசகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். என்ன நடக்கிறது என்று பிரபல ஆங்கி...
வணங்கான் டைட்டிலை பயன்படுத்த பாலாவுக்கு தடை இல்லை!

வணங்கான் டைட்டிலை பயன்படுத்த பாலாவுக்கு தடை இல்லை!

News
வணங்கான் டைட்டிலை பயன்படுத்த பாலாவுக்கு தடை இல்லை ; உயர்நீதிமன்றம் தீர்ப்பு! இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘வணங்கான்’ ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, பட வெளியீட்டை நோக்கி போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் எஸ்.சரவணன் என்பவர் ‘வணங்கான்’ என்கிற டைட்டிலை இயக்குனர் பாலா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் தங்களது படத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்றும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மாண்புமிகு. வேல்முருகன் எஸ்.சரவணன் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ம...
ஒன்ட்ராக ஒரிஜினல்ஸின் அடுத்தப் படைப்பு ‘ராசாத்தி’!

ஒன்ட்ராக ஒரிஜினல்ஸின் அடுத்தப் படைப்பு ‘ராசாத்தி’!

News
ஒன்ட்ராக ஒரிஜினல்ஸின் அடுத்தப் படைப்பு ‘ராசாத்தி’! இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் ஒன்ட்ராக என்டர்டெயின்மென்ட் புதிய திறமையாளர்களை ஊக்குவித்து ஆதரவளிக்கும் விதமாக அவர்களுடன் இணைந்து பல இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறது. ஒரு ஊரில் ஒரு ஃபிலிம் ஹவுஸ் உடன் இணைந்து ஒன்ட்ராக என்டர்டெயின்மென்ட் திரைப்படங்கள், உயர்தர இசை வீடியோக்கள், குறும்படங்கள் மற்றும் பிற ஒரிஜினல் கண்டெண்ட்களைத் தயாரித்து வருகிறது. நம் வழக்கமான பாரம்பரிய சினிமாவிற்கு அப்பாற்பட்டு பலதரப்பட்ட பார்வையாளர்களின் பாராட்டுகளையும் இது பெற்று வருகிறது. ஒன்ட்ராக ஒரிஜினல்ஸ், ஒரிஜினல் மற்றும் சுயாதீன இசைக்கான அவர்களின் பிரிவு, அதன் புதுமையான மற்றும் ஈர்க்கக்கூடிய கதைசொல்லலுக்கு பெயர் பெற்றது. இதைத்தாண்டி அடிக்கடி புது தீம் மற்றும் ஜானர்களையும் அது முயற்சி செய்து பார்த்து வருகிறது. புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் மற்றும் புது இசைக்கலைஞர்க...
தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டமாக ரீ ரிலீஸாகும் ‘புதுப்பேட்டை’!

தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டமாக ரீ ரிலீஸாகும் ‘புதுப்பேட்டை’!

News
தனுஷின் பிறந்தநாளன்று ‘புதுப்பேட்டை’யை ரீ ரிலீஸ் செய்யும் ஏடிஎம் புரொடக்சன்ஸ்! தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் தனுஷ் ரொம்பவே வித்தியாசமானவர். தென்னிந்தியா, பாலிவுட் எல்லாம் தாண்டி ஹாலிவுட் வரை தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தியவர். இன்னொரு பக்கம் நடிப்பையும் தாண்டி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் இயக்குநர் என இன்னும் பல முகங்கள் அவருக்கு உண்டு.. ‘பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான தனுஷ், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது தனது 50வது படமாக ‘ராயன்’ படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். ஜூலை-28 தனுஷின் பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாடும் விதமாக வரும் ஜூலை-26ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது. இன்னொரு பக்கம் பிரபல கதாநாயகர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் நடித்த ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெற்று வருகின்றன, அந்த வகையில் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்ட...
வாழை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

வாழை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

News
Disney+ Hotstar, Navvi Studios மற்றும் Farmer’s Master Plan Production வழங்கும், இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கி இருக்கும் “வாழை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு! Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட, புதுமுக குழந்தை நட்சத்திரங்களுடன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன், கர்ணன் ஜானகி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, மனதை மயக்கும் ஒரு மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “வாழை”. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் தனது நான்காவது படைப்பாக இப்படத்தினை இயக்கியுள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியீட்டு விழா, படக்குழுவ...
விஜய் சேதுபதி வெளியிட்ட ‘RED FLOWER’ படத்தின் போஸ்டர்!

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘RED FLOWER’ படத்தின் போஸ்டர்!

News
“RED FLOWER” படத்தின் புதிய லுக் போஸ்டர்ஐ வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்கும் “RED FLOWER” ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கலந்த திரைப்படம். கதையின் நாயகனாக நடிகர் விக்னேஷ் நடிக்கின்றார், எழுதி இயக்குகிறார் இயக்குனர் ”ஆண்ட்ரூ பாண்டியன்” ரசிகர்களையும் திரையுலகினரையும் மகிழ்வித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி “RED FLOWER” படத்தின் புதிய பரபரப்பான லுக் போஸ்டரை வெளியிட்டார். நடிகர் விக்னேஷ் நடித்த ரொமான்டிக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! இப்படத்தில் அவரது கதாபாத்திர வடிவமைப்பும் , அவரது தோற்றமும் , நடிப்பும் நிச்சயம் படம் பார்ப்பவர்களை ஈர்க்கும் ! அவரது மறுபிரவேசத்தைச் சுற்றியுள்ள உற்சாகம், பெரியதோர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது !. அவரை மீண்டும் ஒரு முறை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆர்...