‘அக்யூஸ்ட்’ படத்தின் இரண்டாம் சிங்கிள் பிரியாணி டீஸர் ரம்ஜான் அன்று வெளியீடு!
உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ பிரம்மாண்ட திரைப்படத்தின் இரண்டாம் சிங்கிள் பிரியாணி டீஸர் ரம்ஜான் அன்று வெளியீடு*
*நரேன் பாலகுமார் இசையில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி உற்சாகமிக்க பிரியாணி பாடலை பாடியுள்ளனர்*
*'அக்யூஸ்ட்’ டப்பிங் மற்றும் இதர போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன*
ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நா...









