Sunday, November 29

Author: admin

நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரரின் காதல் கதை “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”

நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரரின் காதல் கதை “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”

News
ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் படம் "கமாண்டோவின் லவ் ஸ்டோரி"! கதை, திரைக்கதை எழுதி, கதையின் நாயகனாக நடித்து, இயக்குகிறார் வீர அன்பரசு. இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் சிவராமன் இசை அமைத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் தங்கை இஸ்ரத் காதரி இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். பழநி பாரதி, தேன்மொழி, பொன்னடியான் ஆகியோர்கள் பாடல்கள் எழுதி உள்ளனர். இஸ்ரத் காதரி, ஹரிஷ் ராகவேந்தர், கார்த்திக், ஸ்வேதா, தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் பாடியுள்ளனர். நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரரின் காதல் கதை தான் "கமாண்டோவின் லவ் ஸ்டோரி" கதையின் நாயகனாக வீர அன்பரசு நடிக்கிறார். ஜோடியாக மும்பை நடிகை ஏஞ்சல் நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், பிருத்திவிராஜ் பப்லு, சூப்பர் குட் சுப்பிரமணி, வாழை ஜானகி, முல்லை, மதுமிதா, பாய்ஸ் ராஜன், இயக்குனர் அரவிந்தராஜ், ஒஏகே சுந்தர், சுஷ்மிதா, நிஷா, துரைப்பாண்...
பிரபாஸுடன் இணைந்து நடிக்கும் ஹிந்தி நடிகர் அனுபம் கேர்!

பிரபாஸுடன் இணைந்து நடிக்கும் ஹிந்தி நடிகர் அனுபம் கேர்!

News
'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் - இயக்குநர் ஹனு ராகவபுடி - மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படத்தில் இணைந்த பாலிவுட் ஜாம்பவான் அனுபம் கேர்! ப்ளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களான சலார் மற்றும் கல்கி 2898 கிபி ஆகிய படங்களின் மூலம் வெற்றியின் உச்சத்தில் இருக்கும் 'ரெபல் ஸ்டார் ' பிரபாஸ் தற்போது படைப்பாற்றல் மிக்க இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கும் பான் இந்திய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்திய அளவில் புகழ்பெற்ற பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம்- வாழ்க்கையை விட மிகப்பெரிய கூறுகள் நிறைந்த பிரம்மாண்டமான படைப்பாக இருக்கும் என உறுதி அளிக்கிறது. இந்த திரைப்படத்தில் பாலிவுட் ஜாம்பவான் அனுபம் கேர் ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.‌ இதனை நடிகரே பகிர்ந்து கொண்டுள்ளார். தான் ஏற்று நடிக்கும் கேரக்டர்களை கவனமாக தேர்வு செய்யும் அ...
‘ரெட்ரோ’ படத்தின் “கண்ணாடி பூவே” ஃபர்ஸ்ட் சிங்கிள்

‘ரெட்ரோ’ படத்தின் “கண்ணாடி பூவே” ஃபர்ஸ்ட் சிங்கிள்

News
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் “ரெட்ரோ” படத்தின் “கண்ணாடி பூவே” ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் “ரெட்ரோ” படத்திலிருந்து, அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் ரசிகர்களை மனங்களை கொள்ளை கொள்ளும் அழகான மெலோடி பாடலாக “கண்ணாடி பூவே” ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை, பாடலாசிரியர் விவேக்கின் அற்புதமான வரிகளில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியுள்ளார். இப்பாடல் வெளியானவுடனே, இசை ரசிகர்களின் இதயங்களை கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சூர்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாக...
காதலின் மகிழ்ச்சி மற்றும் வலியை இசையின் மூலம் வெளிப்படுத்தும் ‘பட்டி’ ஆல்பம்!

காதலின் மகிழ்ச்சி மற்றும் வலியை இசையின் மூலம் வெளிப்படுத்தும் ‘பட்டி’ ஆல்பம்!

News
காதலின் மகிழ்ச்சி மற்றும் வலியை இசையின் மூலம் வெளிப்படுத்தும் 'பட்டி' ('Buddy') காதலர் தினத்தை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது! *வார் ஹார்ஸ் புரொடக்ஷன்ஸ் தீபா லக்ஷ்மண் பிரபு தயாரிப்பில் சத்தியசீலன் இயக்கத்தில் பிரியா மாலி இசையில் விவேக் வரிகளில் தர்ஷன், குஷி ரவி நடிப்பில் உருவாகியுள்ள உணர்ச்சிப்பூர்வ இசை ஆல்பத்தை ஏபி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது* காதலும் இசையும் இணைபிரியாதது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த வருட காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள ஆல்பம் 'பட்டி' ('Buddy'). காதலின் உணர்வுகளான மகிழ்ச்சி மற்றும் வலியை இதயத்தை தொடும் வகையில் இசை மற்றும் காட்சிப்படுத்தி இருக்கும் 'பட்டி' ஆல்பத்தை வார் ஹார்ஸ் புரொடக்ஷன்ஸ் பேனரில் தீபா லக்ஷ்மண் பிரபு தயாரிக்க சத்தியசீலன் இயக்கியுள்ளார். இவர் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறி...
வெற்றிக்கு உத்வேகம் கொடுக்கும் ‘கேம் ஆஃப் சேஞ்ச்’ ஆவணப்படம்!

வெற்றிக்கு உத்வேகம் கொடுக்கும் ‘கேம் ஆஃப் சேஞ்ச்’ ஆவணப்படம்!

News
வாழ்க்கையில் வெற்றிபெற தூண்டும் ஆவணப்படம் 'கேம் ஆஃப் சேஞ்ச்'! இயக்குநர் சித்தின் இயக்கியுள்ள 60 நிமிட ஆவணப்படம் "கேம் ஆஃப் சேஞ்ச்" வெளியீட்டை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆவணப்படத்தை சித்தார்த் ராஜசேகர் மற்றும் மீனா சாப்ரியா இணைந்து தயாரித்துள்ளனர். வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்ற எட்டு தனிநபர்களின் நம்ப முடியாத கதைகளை விவரிக்கும் கதைகளை சார்ந்து இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. "கேம் ஆஃப் சேஞ்ச்" மனித குலத்தின் மீள்தன்மைக்கு சான்றாக செயல்படுவதை எடுத்துரைக்கும் வகையில், ஒவ்வொரு தனி நபரும் தங்களுக்கான சவால்களை கடந்து எப்படி தங்களது துறையில் சாதித்தனர் என்பதை காட்டுகிறது. இவர்களது பயணம் பார்வையாளர்களுக்கு உறுதி, நம்பிக்கையோடு தங்கள் கனவுகளை அடைய செய்யும் சக்தியை உணரச் செய்யும். அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கக்கூடிய நபர்களின் சாதனைகள...
“பவதாரிணியின் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும்” _ புயலில் ஒரு தோணி இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா!

“பவதாரிணியின் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும்” _ புயலில் ஒரு தோணி இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா!

News
*“காற்று உள்ளவரை பவதாரிணியின் இசையும் குரலும் எங்கும் பரவி இருக்கும்”; புயலில் ஒரு தோணி இசை வெளியீட்டு விழாவில் கவிஞர் சினேகன் உருக்கம்! B.G.பிக்சர்ஸ் சார்பில் ஜலீல் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘புயலில் ஒரு தோணி’. புதுமுகங்கள் விஷ்ணுபிரகாஷ், அர்ச்சனாசிங், இளவரசு, ராதாரவி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடிக்கும் இந்தப்படத்தை ஈசன் இயக்கியிருக்கிறார். மறைந்த இசையமைப்பாளர் பவதாரிணி இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவர் இசையமைப்பில் உருவான கடைசி படமும் இதுதான். இசைஞானி இளையராஜாவின் தவப்புதல்வி பின்னணிப் பாடகியும் இசையமைப்பாளருமான பவதாரணி மிக குறைந்த வயதிலேயே கடந்த வருடம் இந்த உலகை விட்டு மறைந்தது திரையுலகுக்கும் இசையுலகுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. நேற்று (பிப்-12) அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியில் பிறந்த நாள், நினைவு நாள் இரண்டும் ஒரு சேர அனுஷ்டிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவரது இசையமைப்பி...
மீண்டும் நடிக்க வரும் ‘காதல் ஓவியம்’ கண்ணன்!

மீண்டும் நடிக்க வரும் ‘காதல் ஓவியம்’ கண்ணன்!

News
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் அறிமுக நாயகன் கண்ணனை ஞாபகம் இருக்கிறதா? காதல் ஓவியம் படத்தின் மூலம் மறக்க முடியாத நடிகராக அறியப்பட்டவர் மூத்த நடிகர் கண்ணன். இவர் 'சக்தி திருமகன்' படத்திற்காக அழுத்தமான கதாப்பாத்திரத்தின் மூலம் பெரிய திரைக்கு மறுபிரவேசம் செய்கிறார். பல ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகியிருந்த கண்ணன், சக்தி திருமகன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் அவரது நடிப்பு மற்றும் அவரது கதாபாத்திரத்தின் படைப்பு குறித்த ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அவரது comeback, இந்த உணர்ச்சிகரமான படத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது. மிகவும் புகழப்பட்ட படைப்புகளான அருவி மற்றும் வாழ் படத்தின் இயக்குனரான அருண் பிரபு இயக்கும் 'சக்தி திருமகன்' படம், குடும்ப உறவுகள், அதிரடி சண்டைகாட்சிகள் மற்றும் எமோஷனல் நிறைந்த ஒரு ஜன ரஞ்சக படமாக உருவாகிறது. இந்த படம் விஜய் ஆண்டனியின் சினிமா வாழ்...
ஆரி அர்ஜூனன் நடிக்கும் ‘4த் ஃப்ளோர்’!

ஆரி அர்ஜூனன் நடிக்கும் ‘4த் ஃப்ளோர்’!

News
4த் ஃப்ளோர் - ஆரி அர்ஜூனன் நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியானது. மனோ கிரியேஷன் சார்பில் A. ராஜா தயாரிப்பில், ஆரி அர்ஜூனன், தீப்ஷிகா, பவித்ரா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அதன் தலைப்பினை, படக்குழு படத்தின் நாயகன் ஆரி அர்ஜூனன் பிறந்தநாளான பிப்ரவரி 12 - இல் அறிவித்தது. முன்னதாக அவருடைய பிறந்தநாளை பூந்தமல்லியில் உள்ள பார்வைத்திறன் குன்றியோர் பள்ளியில் கேக் வெட்டியும், விருந்து பரிமாறியும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்தின் தலைப்பினை பார்வைத்திறன் குன்றிய வயதானவர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் ஆரி அர்ஜூனன் வெளியிட்டார். பரபரப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்தது. 4த் ஃப்ளோர் திரைப்படத்தை மனோ கிரியேஷன் சார்பில் A. ராஜா தயாரித்துள்ளார். L.R....
விஜய் தேவரகொண்டாவின்  ‘கிங்டம்’!

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’!

News
விஜய் தேவரகொண்டாவின் VD 12 படத்தின் தலைப்பு 'கிங்டம்' பட டீசர் ரசிகர்களுக்கு மாஸ்டர் பீஸ் அனுபவத்தை தருவதை உறுதியளிக்கிறது! கௌதம் தின்னனுரி இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 'VD12', இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. இந்தப் படத்தின் தலைப்பு தற்போது 'கிங்டம்' என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு டீசர் வெளியாகியுள்ளது. தீவிர ஆக்‌ஷன் மற்றும் உணர்வுகள் நிரம்பிய படமாக இது உருவாகியுள்ளது. சீட்டின் நுனியில் பார்வையாளர்களை அமர வைக்கும் வகையிலான த்ரில்லர் மற்றும் பிரம்மாண்ட திரையனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தப் படம் வழங்க இருக்கிறது. டீசரில் ஜூனியர் என்டிஆர் தெலுங்கிற்கும் சூர்யா தமிழுக்கும், ரன்பீர் கபூர் இந்திக்கும் குரல் கொடுத்துள்ளார்கள். இது ரசிகர்களுக்கும் சிறந்த டீசர் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. இந்தப் படம் சிறப்பாக வர நடிகர் விஜய் தேவரகொண்டா தனது க...
இயக்குநர் ராம் கோபால் வர்மா ‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’ ‘சாரி’!

இயக்குநர் ராம் கோபால் வர்மா ‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’ ‘சாரி’!

News
இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ‘சாரி’ திரைப்படத்தின் டிரெய்லர் முத்திரை பதிக்கிறது! இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் வெளியாக இருக்கும் 'சாரி' திரைப்படம் அதன் அறிவிப்பு வந்ததில் இருந்தே இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் டிரெய்லர் அதன் எதிர்பார்ப்பை இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இயக்குநர் ராம் கோபால் வர்மா ‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’ வகை ஜானர் எடுப்பதில் வல்லவர். அந்த ஜானரில் அமைந்திருக்கும் இந்தக் கதையில் பல திருப்பங்கள் அமைந்திருப்பது ரசிகர்களுக்கு நிச்சயம் சிறந்த விருந்தாக அமையும் என்பதையே டிரெய்லர் காட்டுகிறது. இதை இயக்குநர் கிரி கிருஷ்ணா சரியாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார். 'சாரி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ...