Sunday, November 29

Author: admin

63 வயதில் படத்தை இயக்கி அறிமிகமாகும் பெண் இயக்குநர் ஜெயலட்சுமி!

63 வயதில் படத்தை இயக்கி அறிமிகமாகும் பெண் இயக்குநர் ஜெயலட்சுமி!

News
லிங்கேஷ், கஞ்சா கருப்பு நடிக்கும் புதிய திரைப்படம் விரைவில் வெளியாகிறது! *பரபரப்பான இறுதிக்கட்ட பணிகளில்,  Sky wanders Entertainment நிறுவனத்தின் முதல் திரைப்படம் !!* *Sky wanders Entertainment நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.* இறுதிக்கட்ட தயாரிப்பிலுள்ள இப்படத்தின் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. திரைத்துறை மீதான தீராக்காதலிலும், ஆர்வத்திலும், 63 வயதில் தனது முதல் படமாக  இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஜெயலட்சுமி.  இது அவரது முதல் திரைப்படம் என்றாலும் திரைத்துறைக்கு பழமையானவர். மீனவ மக்கள் வாழ்க்கை பின்னணியில்  ஒரு மென்மையான, முக்கோண காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. லண்டனிலிருந்து தமிழக கலாச்சாரத்தை ஆய்வு ...
“எமகாதகி” படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்!

“எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

News
தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த எமோஷனல் ஹாரர் த்ரில்லர் “எமகாதகி” பட ஃபர்ஸ்ட் லுக் ! தமிழ் சினிமாவில் வந்து குவியும், பல வகையான ஹாரர் த்ரில்லர் படங்களுக்கு மத்தியில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. “எமகாதகி” திகில் படமா? அல்லது அம்மன் படமா? என்று இப்போஸ்டரை வைத்து நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், “எமகாதகி” மற்ற திகில் படங்களிலிருந்து மாறுபட்ட தனித்துவமான படைப்பாக இருக்கும் என்பதை, உணர்த்துமென தயாரிப்பாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள். ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கணபதி ரெட்டி இணைந்து தயாரித்துள்ள “எமகாதகி” திரைப்படத்தை, யெஷ்வா பிக்சர்ஸ் உலகம் முழுவதும் வெளியிடுகிறது. உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா மற்றும் மிஸ்டர்.பிரக்னெண்ட் படப்புகழ் ரூபா கொடவாயூர் முன்னணி பா...
சங்ககிரி ராஜ்குமாரின் மற்றுமோர் புதுமைப் படைப்பு ‘பயாஸ்கோப்’!

சங்ககிரி ராஜ்குமாரின் மற்றுமோர் புதுமைப் படைப்பு ‘பயாஸ்கோப்’!

News
ஆஹா ஃபைண்ட் - புரொடியூசர் பஜார் - சங்ககிரி ராஜ்குமார் கூட்டணியின் 'பயாஸ்கோப்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சத்யராஜ்- சேரன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் 'பயாஸ்கோப்' திரைப்படம் ஜனவரி 3 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகு இந்த திரைப்படம் 'ஆஹா ஃபைண்ட்' டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பயாஸ்கோப்' திரைப்படத்தில் சத்யராஜ், சேரன், சங்ககிரி ராஜ்குமார், சங்ககிரி மாணிக்கம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த உண்மை கதையில் அசலான கதை மாந்தர்களே அவரவர் வேடங்களில் நடித்திருக்கிறார்கள். முரளி கணேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டில் புரொடியூசர் பஜார் நிறுவனத்துடன் சங்ககிர...
‘விடுதலை பாகம்2’ படத்தின் வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!

‘விடுதலை பாகம்2’ படத்தின் வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!

News
  'விடுதலை பாகம்2' படத்தின் வெற்றியைக் கொண்டாடிய படக்குழு! 'விடுதலை பாகம் 2' படத்தின் பிரம்மாண்ட வெற்றியை ஒட்டுமொத்த படக்குழுவினரும் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். 'விடுதலை பாகம்2' படம் மாபெரும் வெற்றியடையச் செய்ததற்காக, குழுவில் உள்ள அனைவருக்கும் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் நன்றி தெரிவித்தார். இப்படம் டிசம்பர் 20, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியானது. உலகம் முழுவதும் உள்ள விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது....
டாக்டர். சிவராஜ்குமாரின் புதிய மெகா பட்ஜெட் திரைப்படம்!

டாக்டர். சிவராஜ்குமாரின் புதிய மெகா பட்ஜெட் திரைப்படம்!

News
'மாஸ் மகாராஜா' டாக்டர். சிவராஜ்குமார் தனது புதிய மெகா பட்ஜெட் படத்திற்காக ADD-ONE பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைகிறார்! கன்னடத் திரையுலகின் பெருமையான டாக்டர். சிவராஜ்குமார் தனது ஹாட்ரிக் வெற்றியின் மூலம், தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் தனது மாஸ் நடிப்பால் தமிழ் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தார். பின்னர், தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது திரைப்படங்கள் தற்போது தமிழ் மற்றும் பிற மொழி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. மிக அரிதாக, நடிகர்களை அவர்கள் நடிப்பிற்காக மட்டுமல்லாது அவர்களின் இயல்புக்காகவும் நேசிக்கப்படுகிறார்கள். டாக்டர். சிவராஜ்குமார் அத்தகைய நடிகர்களில் ஒருவர். அவர் #MB என்ற மெகா பட்ஜெட் படத்தில் விரைவில் பணியாற்ற உள்ளார். மும...
பா.இரஞ்சித் முன்னெடுக்கும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி!

பா.இரஞ்சித் முன்னெடுக்கும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி!

News
பா.இரஞ்சித் முன்னெடுக்கும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி முக்கியமான ஒரு பண்பாட்டு முயற்சி -விஜய்சேதுபதி இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை எனும் இசை நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் மார்கழிமாதத்தில் நடைபெற்றுவருகிறது. ஐந்தாவது வருடமாக 2024 ம் வருடத்திற்கான நிகழ்ச்சி டிசம்பர் 27, 28, 29 ஆகிய நாட்களில் சென்னை மைலாப்பூர் சாந்தோம் பள்ளியில் நடைபெற்றது. ஐநூறுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் மேடையேற்றப்படாத கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகொண்டனர். நிறைவு நாளில் நடிகர் விஜய்சேதுபதி கலந்துகொண்டு மக்களிசை மாமணி விருதுகளை கூத்து ஆசிரியர் செல்லமுத்து, ராஜாராணி ஆட்டக்கலைஞர் முப்பிலி இருவருக்கும் வழங்கினார். இது போன்ற மக்களிசை நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு...
ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகும் கேம் சேஞ்சர்” படத்தின் டிரெய்லர்!

ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகும் கேம் சேஞ்சர்” படத்தின் டிரெய்லர்!

News
குளோபல் ஸ்டார் ராம்சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில், "கேம் சேஞ்சர்" படத்தின் டிரெய்லர், ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது !! பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் "கேம் சேஞ்சர்" படத்தின் டிரெய்லர் ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது !! குளோபல் ஸ்டார் ராம்சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா திரைப்படமான "கேம் சேஞ்சர்" படத்தின் அதிரடி டிரெய்லர் ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் ஜனவரி 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சமீபத்தில், தயாரிப்பாளர்கள் டல்லாஸில் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வை நடத்தினர். அந்நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு இந்தியப் படத்தின் முதல் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு இதுதான். தற்போது, கேம் சேஞ்சர் மற்றொரு சாதனையைப் படைத்துள்ளது. விஜயவாடா பிருந்தாவன் காலனியில் உள்ள, வஜ...
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான படம்  ‘துணிந்தவன்’

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான படம் ‘துணிந்தவன்’

News
பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்டு 'துணிந்தவன்' என்ற பெயரில் ஒரு புதிய படம்! நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எத்தனையோ நடைபெறுகின்றன. குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் கொடுமைகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அந்த மன நோய்க்குக் காரணம் என்ன என்பது புரியாத புதிராக உள்ளது .உண்மையில் அப்படி ஒரு பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்டு 'துணிந்தவன்' என்ற பெயரில் ஒரு புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை சுஜீஷ் தெக்ஷணா காசி - ஹரிநாராயணன் இயக்கியுள்ளார்கள். இந்தப் படம் தக்ஷணா காசி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது .இந்தப் படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.உன்னி நம்பியார் இசையமைத்துள்ளார். அச்சு விஜயன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜீமோன் என். எம்.கலை இயக்கத்தைக் கவனித்துள்ளார். இ...
நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ‘கரவாலி’ படத்தின் டீசர் வெளியீடு!

நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ‘கரவாலி’ படத்தின் டீசர் வெளியீடு!

News
கௌரவத்தின் சின்னமாக கவனம் ஈர்க்கும் நடிகர் பிரஜ்வல் தேவராஜின் 'கரவாலி' பட டீசர்! 'அது சாதாரண நாற்காலி அல்ல. கௌரவத்தின் சின்னம்' எனும் குரலுடன் வெளியாகி இருக்கும் நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ' கரவாலி ' படத்தின் டீசர் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.‌ இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'கரவாலி'. இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தருணத்தில் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அதிரடியான புதிய டீசரை வெளியிட்டு, சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளனர். குரு தத் கனிகா இயக்கத்தில் 'டைனமிக் பிரின்ஸ்' பிரஜ்வல் தேவராஜ் நடித்துள்ள 'கரவாலி' படத்தின் தனித்துவமான டீசர்.. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. பொதுவாக டீசரில் கதாநாயகன்- கதாநாயகி அல்லது முன்...
மலையாளத்தில் முதல் முறையாக வசூல் சாதனை படைத்த மார்கோ!

மலையாளத்தில் முதல் முறையாக வசூல் சாதனை படைத்த மார்கோ!

News
இந்திய சினிமாவை புரட்டிப்போடும் ஆக்ஷன், ஸ்டைலிஷ் படம் மார்கோ* பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் "மார்கோ." உன்னி முகுந்தன் நடிப்பில் உருவாகி இருக்கும் மார்கோ திரைப்படத்தை ஹனீஃப் அதெனி இயக்க, கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ஷரீஃப் முகமது தயாரித்துள்ளார். இந்தப் படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ. 10.8 கோடி வசூல் செய்துள்ளது. அந்த வகையில், மலையாளத்தில் வெளியாகி முதலில் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை மார்கோ பெற்று இருக்கிறது. படத்தின் கதையோட்டம் மற்றும் உன்னி முகுந்தனின் அசுர நடிப்பை விமர்சகர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். இந்தப் படத்தின் தொழில்நுட்ப பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு இருப்பது, இதன் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி இருக்கிறது. மார்கோ திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை சந்துரு செல்வராஜ் மேற்கொள்ள, ஷமீர் ...