Sunday, November 29

Author: admin

‘ராஜா கிளி’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

‘ராஜா கிளி’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

News
இயற்கை பேரிடர் காரணமாக 'ராஜா கிளி' படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர்-27 க்கு மாற்றம்! 'மிக மிக அவசரம்', 'மாநாடு' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’. கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். தம்பி ராமையா இந்த படத்தில் கதைநாயகனாக நடிக்க அவரது வெற்றி கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பாடகர் கிரிஷ், வெற்றிக்குமரன், இயக்குநர் மூர்த்தி, ஷ்வேதா ஷிரிம்டன், சுபா, பிரவீன், முபாஸிர், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ...
” திருக்குறள் ” படத்திற்கு பாடல்கள் எழுதி இசையமைக்கும் இசைஞானி இளையராஜா!

” திருக்குறள் ” படத்திற்கு பாடல்கள் எழுதி இசையமைக்கும் இசைஞானி இளையராஜா!

News
" திருக்குறள் " படத்திற்கு பாடல்கள் எழுதி இசையமைக்கும் இசைஞானி இளையராஜா. பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. படைப்பினூடாக படைப்பாளியைக் கண்டடையும் முயற்சியில் திருவள்ளுவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. காதலோடு, வீரமும் தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகும். அன்றைய தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் போர்க்களக் காட்சிகளு...
சிம்மக் குரலில் கர்ஜிக்கும் மகேஷ் பாபு!

சிம்மக் குரலில் கர்ஜிக்கும் மகேஷ் பாபு!

News
டிஸ்னியின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் பிரத்யேகமான புதிய போஸ்டரில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு முஃபாசாவாக கர்ஜிக்கிறார்! டிஸ்னியின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் பிரம்மாண்ட ஊடக நிகழ்வில் நம்ரதா ஷிரோத்கர் கட்டமனேனி சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிரத்யேகமான புதிய போஸ்டரை வெளியிட்டார். டைமனுக்கு அலி மற்றும் டாக்காவுக்கு சத்யதேவ் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். டிஸ்னியின் முஃபாசா: தி லயன் கிங் டிசம்பர் 20 ஆம் தேதி தெலுங்கில் வெளியாகிறது. இதில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு முஃபாசாவாகவும், பிரம்மானந்தம் பும்பாவாகவும், டைமோனாக அலியும், சத்யதேவ் டாக்காவாகவும், அய்யப்பா பி ஷர்மா கீரோஸாகவும் குரல் கொடுத்துள்ளனர்....
நடனத்துக்கு மட்டுமே இந்தியாவில் துவக்கப்படும் முதல் OTT தளம்!

நடனத்துக்கு மட்டுமே இந்தியாவில் துவக்கப்படும் முதல் OTT தளம்!

News
ஷெரிஃப் மாஸ்டர் டான்ஸ்கான இந்தியாவின் முதல் OTT பிளாட்ஃபார்ம், JOOPOP HOME ஐ துவங்கியுள்ளார் ! தமிழ் திரையுலகின் பிரபல டான்ஸ் மாஸ்டரான **ஷெரிப் மாஸ்டர்** டான்ஸ்காக பிரத்தியேகமான,  இந்தியாவின் முதல் OTT தளமான **JOOPOP HOME** ஐ துவங்கியுள்ளார்.  வடபழனி நெக்ஸஸ் விஜயா மாலில் நடைபெற்ற விழாவில்,  இந்த செயலி (app) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி (app)  நடன ஆர்வலர்கள், நடன கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள், கலை வடிவத்துடன் எவ்வாறு மேம்படுத்தலாம்  என்பதில் புதிய  புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. JOOPOP HOME அறிமுக நிகழ்வில் புகழ்பெற்ற திரைப்பட கலைஞர்களான **இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்**, இயக்குநர் **ராஜ்குமார் பெரியசாமி** மற்றும் நடிகர் **பாபி சிம்ஹா** ஆகியோருடன் ஷெரீப்பின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் கலந்து கொண்டனர். பல ஆண்டுகளாக நடனத் துறையில் ஷெரிஃப் ஆற்றி வந்த சிறப்பான பணி...
SILK SMITHA – Queen of the South

SILK SMITHA – Queen of the South

News
SILK SMITHA – Queen of the South தென்னிந்திய சினிமாவின் அடையாளமான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை STRI சினிமாஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது! பழம்பெரும் நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, STRI சினிமாஸ் தனது வரவிருக்கும் திரைப்படமான "சில்க் ஸ்மிதா – Queen of the South" திரைப்படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறு, நடிகை சில்க் ஸ்மிதாவின் வசீகரிக்கும் கதையை உயிர்ப்பிக்கும். இதில் சந்திரிகா ரவி பெயரிடப்பட்ட பாத்திரத்தில் நடிக்கிறார். ஜெயராம் சங்கரன் இயக்கத்தில், S.B விஜய் அமிர்தராஜ் தயாரிப்பில், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் படம் தயாரிப்பைத் தொடங்க உள்ளது. அவரது பிறந்தநாளில் இந்த சிறப்பு அறிவிப்பைக் குறிக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் ஒரு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளனர், இது பார்வையாளர்களுக்கு காந்தக்கண்ணழகி...
2025 பொங்கல் வெளியீடாக வரும் ‘தருணம்’!

2025 பொங்கல் வெளியீடாக வரும் ‘தருணம்’!

News
ஸென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரித்து வரும் திரைப்படம் 'தருணம்'.* 'தேஜாவு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ள தருணம் படத்தில் கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பால சரவணன், ராஜ் அய்யப்பன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜா பட்டார்ஜி ஒளிப்பதிவாளராகவும், அருள் சித்தார்த் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ள இப்படத்திற்க்கு தர்புகா சிவா பாடல்களுக்கான இசையும், அஸ்வின் ஹேமந்த் பிண்ணனி இசையும் மேற்கொண்டுள்ளனர். தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது வரும் 2025 பொங்கல் வெளியீடாக இப்படம் வெளியிடவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது....
‘பிளாக்மெயில்’ படத்தின் டப்பிங் தொடங்கியது!

‘பிளாக்மெயில்’ படத்தின் டப்பிங் தொடங்கியது!

News
ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜெயக்கொடி அமல்ராஜ் வழங்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' & 'கண்ணை நம்பாதே' படங்களின் இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ‘பிளாக்மெயில்’ படத்தின் டப்பிங் தொடங்கியது! நடிகர் அருள்நிதியின் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' மற்றும் உதயநிதி ஸ்டாலினின் 'கண்ணை நம்பாதே' போன்ற த்ரில்லர் திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் மாறன். இப்போது, ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி, ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள 'பிளாக்மெயில்' படத்தை இயக்கியுள்ளார். படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இன்று ஜி.வி.பிரகாஷ் குமார் தனது டப்பிங்கை தொடங்கியுள்ளார். இயக்குநர் மு. மாறன் கூறும்போது, ​​“திட்டமிட்டபடி படம் சரியான வேகத்தில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட ...
திருநங்கைகளின் வாழ்வியல் சோகங்களைப் பேசும் “சைலண்ட்” !

திருநங்கைகளின் வாழ்வியல் சோகங்களைப் பேசும் “சைலண்ட்” !

News
வார்த்தைகளுக்கு இடையே ஏற்படும் சந்திப்பிழையை போல் வாழ்க்கையில் ஏற்பட்ட சந்ததிப் பிழைகள் இவர்கள் என்று ஒரு கவிஞர் திருநங்கைகளை பற்றி பாடியிருப்பார். திரைப்படங்களில் கறிவேப்பிலையை போல் பயன்படுத்தப்படும் திருநங்கைகளை பிரதான பாத்திரத்தில் நடிக்க வைத்து ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர். SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சமயமுரளி திரைக்கதை வசனத்தில் இன்று தமிழகமெங்கும் வெளியாகியிருக்கும் திரைப்படம் சைலண்ட். முழுக்க புதுமுகங்கள் பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்து தருகிறது. ஒரு பெண் கொலையில் படம் ஆரம்பமாகிறது. அந்தக் கொலையை போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்கும் போது, மேலும் பல கொலைகள் நடக்க ஆரம்பிக்கிறது. இதில் புவனேஸ்வரி எனும் பெண் இருப்பதாக நம்புகிறது போலீஸ். ஆனால் அது புவனேஷ் எனும் ஆண் என...
காதலுக்கு தடையாக நிற்கும் மதங்கள்குறித்து பேசும் ‘பரமசிவன் பாத்திமா’!

காதலுக்கு தடையாக நிற்கும் மதங்கள்குறித்து பேசும் ‘பரமசிவன் பாத்திமா’!

News
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படம் 'பரமசிவன் பாத்திமா', காதலுக்கு மதங்கள் எவ்வாறு தடையாக நிற்கின்றன என்பது குறித்து பேசுகிறது! இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த 'தமிழ்க்குடிமகன்' திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கும் 'பரமசிவன் பாத்திமா' எனும் புதிய படத்தில் விமல் கதையின் நாயகனாக நடிக்கிறார். புரொடக்ஷன் நம்பர் 7 ஆக உருவாகும் இப்படம், மலை கிராமத்தில் வசிக்கும் இரு வேறு நம்பிக்கைகளை சார்ந்த மக்களின் வாழ்க்கையை மதங்களின் கொள்கைகளும் கோட்பாடுகளும் எவ்வாறு பாதிக்கின்றன‌ என்பதை பாசாங்கின்றி சுவாரசியத்துடன் விவரிக்கிறது. இப்படத்த்தில் விமல் நாயகனாக நடிக்க சாயாதேவி, எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ...
போனின்றி அமையாது உலகு என்கிற டேக் லைனுடன் ‘ரிங் ரிங்’!

போனின்றி அமையாது உலகு என்கிற டேக் லைனுடன் ‘ரிங் ரிங்’!

News
  லவ் பண்ணும் போது போனை மாற்றினால் அது 'லவ் டுடே' .கல்யாணத்திற்குப் பிறகு போனை மாற்றினால் 'ரிங் ரிங்'! 'நீரின்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவர். இந்தக் காலத்தில் 'மொபைல் போன் இன்றி அமையாது உலகு' என்ற நிலை உள்ளது .அந்த அளவிற்கு மொபைல் போன் நம்முடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டது.இன்றைய வாழ்க்கையில் மொபைல் போன் நமது இன்ப துன்பங்களில், கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து வருகிறது.மனித உறவில் பல்வேறு சிக்கல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் காரணமாகவும் அது உள்ளது. மொபைல் போன் என்பது இன்று மனிதர்களின் மூன்றாவது கையாக மாறிவிட்டது. அப்படி மொபைல் போனை மையமாக வைத்து 'போனின்றி அமையாது உலகு' என்கிற டேக் லைனுடன் 'ரிங் ரிங்' என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி உள்ளது. இப்படத்தை இயக்குநர் சக்திவேல் இயக்கி உள்ளார். இதற்கு முன்பு கந்தகோட்டை, ஈகோ, 4 சாரி படங்களை இயக்கிய இவருக்கு இது நான்காவது படம். இப்பட...