Thursday, September 24

காணாமல் போனவர் ‘கம்பேக்’ கொடுக்கிறாராம்!

Loading

பிரபலமாக இருந்த ஒரு நடிகர் அல்லது நடிகை ஏதேனும் ஒரு காரணத்தால் இடைவெளி விட்டு, படஉலகை விட்டு விலகி இருந்து, பின்னர் மீண்டும் அவர் படங்கள் நடிக்க தொடங்கியிருக்கிறார் என்றால் மேற்படி நடிகர் அல்லது நடிகை கம் பேக் கொடுக்கிறார் என்றால் அதில் ஒரு அர்த்தம் உண்டு.

ஆனால் நடிக்கும் போதே யார் இவர் என்று தெரியாமல் ஒரு நடிகர் அல்லது நடிகை சில படங்கள் நடித்துவிட்டு கண்டும் காணாமல் போய் சிறிது காலத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும்போது ‘கம் பேக்’  கொடுக்கிறார் என்றால் சிரிப்பு தான் வருகிறது.

அப்படித்தான் இதோ ஒரு காமெடி.

ஆராண் காண்டம் நல்ல படம் என்றாலும் அதை அதிகம் பேர் பார்க்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அதில் நடித்த நடிகை யாரோ யாஸ்மின் பொன்னப்பாவாம்..பாவம்…

இப்போது அவர் மீண்டும் நடிக்க வருகிறார். இடைப்பட்ட காலத்தில் மனோதத்துவத்தில் மேற்படிப்பு படித்திருக்கின்றார். மனோகத்துவம் படித்தவருக்கு இப்போதைய தேவை நல்ல மக்கள் தொடர்பாளர்.

அதுவும் உடனடியாகயாகத் தேவை.