அக்டோபர் 6ஆம் தேதி ‘விழித்திரு’

0

 1,063 total views,  1 views today

சில படங்கள் தான், ரிலீஸ்  தாமதம் ஆனாலும் அதன்  எதிர்பார்ப்பு என்றுமே  குறையாமல் இருக்கும். கிருஷ்ணா. வித்தார்த், வெங்கட் பிரபு மற்றும் தன்ஷிகா நடிப்பில் தயாரான ‘விழித்திரு’ தனது கதையம்சத்தினால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
” இந்த தாமதம் மிகுந்த மனவலியை தந்தது. ஆனால் இந்த தொழிலில் இவ்வாறான எதிர்பாராத காரியங்கள் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. எங்கள் படத்தை ரிலீஸ் செய்யவுள்ள ‘சவுந்தர்யன் பிக்சர்ஸ்’ நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களின் கதை இன்றும்  புதுமையாக இருக்கும்  என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. தரமான கதையை   சுவாரஸ்யமாக.தந்திருப்பதால் இப்படத்தை சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார் இப்படத்தின் இயக்குனர் மீரா கதிரவன்.
Share.

Comments are closed.