அஜித் சாருடன் பணி புரிந்தது அருமையான அனுபவம் – அக்ஷரா ஹாசன்

0

Loading

லட்சக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் உச்ச கதாநாயகர்களின் மிக பிரம்மாண்ட ஆக்ஷன் படங்களில் பொதுவாக பெண் கதாபாத்திரங்கள் அவ்வளவு வலுவாக இருப்பதில்லை. அதே போல் இது போன்ற ஒரு படத்தின் மூலம், சினிமாவின் பிரசித்திபெற்ற குடும்பத்திலிருந்து ஒருவர்  தமிழ் சினிமாவில் கால்பதித்தால் அது அந்த படத்திற்கும் அவருக்கும் சிறப்பு சேர்க்கும். அவ்வாறு ‘விவேகம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுலகில் கால்பதிக்க உள்ளார் அக்ஷரா ஹாசன். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவாவின் இயக்கத்தில், அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாய்  உருவாகியிருக்கும் ‘விவேகம்’ படத்தில் உலகநாயகனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ”இயக்குனர் சிவா சார் என்னிடம் எனது கதாபாத்திரத்தை விவரித்த பொழுது, அது என்னை உடனே கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவமும், கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் கருவியாகவும் அது இருந்தது. பல பரிமாணங்கள் கொண்ட இந்த கதாபாத்திரத்தை செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அஜித் சாருடன்  பணி புரிந்தது ஒரு அருமையான அனுபவம். தான் ஒரு மிகப்பெரிய ஸ்டார் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் எல்லோர்க்கும் உதவியாக இருப்பார். எங்கள் இருவருக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம்  என்பதால் அதனை பற்றி ஷூட்டிங் இடைவேளைகளில் நிறைய பேசினோம்.  பல்கேரியா மற்றும் செர்பியாவின் கடும் குளிரிலும் உறையும் பணியிலும் இப்பட குழுவினர் மிகக்கடுமையாக உழைத்தனர். அந்த அசுர உழைப்பின்  பலனை மக்கள் விரைவில் திரையில் காணப்போகின்றனர். ‘விவேகம்’ படத்தின் ரிலீஸை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறே ன்” என்று கூறினார் அக்ஷரா ஹாசன்.

 

Share.

Comments are closed.