சினிமா கலைஞர்கள் சினமாவை தவிர விளையாட்டு துறையிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான அஜெய்ரத்னினமும் விளையாட்டு துறையில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.
அவர் தற்போது அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் எனும் இடத்தில் வி ஸ்கொயர் என்ற பேட்மிடன் அகாடமியை தொடங்கி இருக்கிறார்.
அதன் திறப்புவிழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார். விழாவில் அஜெய்ரத்னம் மற்றும் அவரது மகன்களான தீரஜ்விஷ்ணு ரத்னம், விஷ்வேஷ் ரத்னம் ஆகியோரும் பங்குபெற்றனர்.