Wednesday, February 12

அதர்வா நடிப்பில் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் “குருதி ஆட்டம்”

Loading

 

 
கடந்த வருடம் வெளி ஆன படங்களில் பெரிதும் பாராட்ட பட்ட படம் “8 தோட்டாக்கள்”. அந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தமிழ் திரை உலகின் எதிர்கால இயக்குனர்களில் மிக முக்கியமானவராக வருவார் என்கிற கணிப்பும் ஏக மனதாகவே இருந்தது, இருக்கவும் செய்கிறது. அவருடைய அடுத்த படத்துக்கு “குருதி ஆட்டம்” என பெயரிட பட்டு உள்ளது. தமிழ் திரை உலகின் தற்போதைய இளம் கதாநாயகர்களில் உச்ச நிலைக்கு போக தகுதியானவர் என பலரும் போற்றும் அதர்வா இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். ராக் போர்ட் என்டேர்டைன்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் pictures சார்பில் ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை எளிமையான முறையில் நடந்தது.
” இந்த படம் முழுக்க, முழுக்க மதுரை மாநகரின் பின்னணியில் உருவாகும் படமாகும். Commercial மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் படம் இது. ஒரு வெற்றி படத்துக்கு உரிய அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் இருக்கும். நாளுக்கு நாள் தன்னுடைய கதாநாயகன்  அந்தஸ்த்தை உயர்த்தும் அதர்வா இந்த படத்தின் கதாநாயகன், அவருடைய முழு திறமைக்கும் தீனி போடும் படமாக “குருதி ஆட்டம்” அமையும்.கதாநாயகி தேர்வு நடைப் பெற்று கொண்டு இருக்கிறது. இந்த மாதத்தின் இறுதியில் படப்பிடிப்பு துவங்கும்”  என கூறினார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்.