அதிரடியான கூட்டணியின் அடுத்த படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’

0

Loading

அதிரடியான கூட்டணிகள் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிகளை பெற்றுள்ளன. அந்த பாணியில் சமீபத்தைய அதிரடி கூட்டணி தான் கார்த்திக்கும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கின் கூட்டணி. இயக்குனர் திருவின் அடுத்த படத்திற்கு தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்து நடிக்கவுள்ளனர். இந்த செய்தி சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை திரு. தனஞ்செயன் அவர்களின் ‘Creative Entertainers and Distributors’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே பரபரப்பும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ரெஜினா கஸ்ஸான்ட்ரா இப்படத்தில் கதாநாயகியாக  நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த செய்தி இப்படத்திற்கு கூடுதல் ஈர்ப்பும் பலமும்  கூட்டியுள்ளது. ஒரு முக்கியமான, பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கவுள்ளார் . தேசிய விருது பெற்ற இயக்குனர்கள் மகேந்திரனும் அகத்தியனும்  இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இக்கதையில் நடிகர் சதீஷ் தனது பாணி  காமெடியில் அசத்தவுள்ளார். இந்த மெகா கூட்டணி ரசிகர்களை ஒரு விருந்தாக இருக்கும் என நம்பப்படுகிறது.
“‘”
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் தலைப்பு ”மிஸ்டர் சந்திரமௌலி” என அறிவிக்கப்பட்டுள்ளது. காலங்களை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் என்றுமே இருக்கும் பெயர் இது . இது குறித்து இப்படத்தின் இயக்குனர் திரு பேசுகையில், ” இப்படத்தின் நடிகர்கள் கூட்டணி படத்திற்கு தூணாக அமைந்து படத்தை அடுத்த லெவெலுக்கு கொண்டுபோயுள்ளது. இயக்குனர் மகேந்திரன் சார், கார்த்திக் சார் மற்றும் அகத்தியன் சார் போன்ற ஜாம்பவான்களோடு  பணிபுரிய வாய்ப்பு கிட்டியுள்ளதை நினைத்தால் மிக பெருமையாக உள்ளது. பல மடங்கு கூடியுள்ள எனது  பொறுப்பை நன்கு அறிவேன். படத்தின் இந்த தலைப்பு எங்களுக்கு ஒரு பெரும் பலமாகியுள்ளது. இந்த எல்லா விஷயங்களின் சங்கமம் இந்த படத்தை மிக  பெரிய படங்களுக்கு இணையாக ஆக்கி உள்ளது ” என நம்பிக்கையோடு கூறினார் இயக்குனர் திரு.
Share.

Comments are closed.