அனைத்து கண்களையும், இதயத்தையும் கவர்ந்த இரவின் 1000 கண்கள்

0

 266 total views,  1 views today

அருள்நிதி, மஹிமா நம்பியார் நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது. கடந்த வார இறுதியில், கடும் போட்டியில்  வெளியான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ இரும்பு திரையின் இறுக்கமான பிடியையும் உடைத்து வெள்ளித்திரையை தன் வசப்படுத்தியது. மிகவும் புதிரான திரைக்கதையும் தான் அதற்கு ஒரு முக்கிய காரணம். இந்த கிரைம் திரில்லர் படத்தை புத்திசாலித்தனமான திரைக்கதையிக் கொடுத்த இயக்குனர் மு மாறன் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பதால் தான் நட்சத்திரங்கள் உருவாகிறார்கள் என்ற நாயகன் அருள்நிதியின் தத்துவத்தை அவரே நிரூபித்திருக்கிறார்.
 
நல்ல நடிப்பு தான் ஒரு வெற்றிப் படத்தின் உரம் என்றால், இரவுக்கு ஆயிரம் கண்கள் அந்த சிறந்த நடிப்பை அதிகமாகவே கொண்டிருக்கிறது. உயர்ந்த நல்ல மனதை உடைய மஹிமா நம்பியார், மீண்டும் தலையெடுக்கும் சாயா சிங், சக்தி வாய்ந்த ஆனந்த ராஜ், எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் கொலைகாரன் அஜ்மல், நம்பும்படியான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், அமைதியான ஆடுகளம் நரேன் ஆகியோரின் சிறப்பான பங்களிப்போடு, தமிழ்நாட்டின் புதிய கோபக்கார இளைஞன் அருள்நிதியும் இணைந்து இந்த படத்தை ஒரு சிறந்த அனுபவமாக்கி இருக்கிறார். மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள் என அடுத்தடுத்து வெற்றிகளை சுவைத்து வரும் தயாரிப்பாளர் ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி டில்லி பாபு, ஒட்டுமொத்த குழுவும் தான் வெற்றிக்கு காரணம் என்கிறார். 
 
திறமையும், முயற்சியும் ஒன்று சேர்ந்து பயணித்தால் வெற்றி மேல் வெற்றி தான். எங்கள் குழுவும், இயக்குனர் மு மாறனும் தான் இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளனர். நாயகன் அருள்நிதி உண்மையிலேயே ஹீரோ. அவருடைய உழைப்பும், அர்ப்பணிப்பும் அவரை பெரிய உயரத்துக்கு இட்டுச் செல்லும். பாடல்கள் மட்டுமல்லாது, சாம் சிஎஸ் பின்னணி இசையையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். 24PMன் மார்க்கெட்டிங் அணுகுமுறையும் படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். திரையரங்குகளில் ரசிகர்கள் வருகை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. திரையரங்கு உரிமையாளர்களிடம் வேண்டுகோளுக்கு இணங்க 220 திரையரங்குகளாக உயர்த்தியிருக்கிறோம். வரும் வாரங்களின் இது இன்னும் கூடுதலாக இருக்கிறது” என்று உற்சாகத்தோடு கூறுகிறார் டில்லி பாபு.

 

Share.

Comments are closed.