அரசகுலம் ஆடியோ வெளியீட்டு விழா

0

 953 total views,  1 views today

DSC_0309

திரைப்படங்களுக்கு பத்திரிகை தொடர்பாளர்களாகப் பணியாற்றுபவர்களை, பொதுவாக சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் உரிய மரியாதை தருவார்கள் என்று சொல்ல முடியாது. சில விதிவிலக்குகளும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு விதிவிலக்குதான் அரசகுலம் படக்குழுவினர்.
அரசகுலம் படத்தின் ஆடியோ வெளிீயீட்டு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்டியோவில் நடந்தபோது, படத்தின் பத்திரிகை தொடர்பாளர் மெளனம் ரவியை பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர் படக்குழுவினர்.
அது மட்டுமா…. படத்தின் ஆடியோவை வெளியிட வந்த தேனிசைத் தென்றல் தேவாவின் தம்பியும் இசைமைப்பாளருமான  சபேஷ், தங்கள் குடும்பத்துக்கே வழிகாட்டி பத்திரிகை தொடர்பாளர் மெளனம் ரவிதான் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அடுத்து பேசவந்த தேவாவின் மற்றொரு தம்பி முரளியும் சபேஷ் பேசியதை அப்படியே ஆமோதித்தார்.
இதே விழாவில் ராகம் ஆடியோஸ் என்ற நிறுவனத்தின் தொடக்க விழாவும் நடைபெற்றது. இதன் நிறுவனர் பிரசாத் பேசுகையில், இப்போதெல்லாம் பெரிய பட்ஜெட் படங்களின் ஆடியோ உரிமைையைத்தான் பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்குவதற்கு முன் வருகின்றன. சிறிய பட்ஜெட் படங்களின் ஆடியோ உரிமையை வாங்குவதற்கு கேசட் வெளியிடும் நிறுவனங்கள் முன்வருவதில்லை. அத்தகைய சிறிய படங்ககளுக்கு உதவுவதற்கும், அந்தப் படங்களை இலவசமாக ப்ரமோட் செய்வதற்கும்தான் இந்த ராகம் ஆடியோஸ் நிறுவனமே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இன்று தமிழ்ப்படவுலகம் இருக்கும் சூழலில் ராகம் ஆடியோஸ் போன்ற நிறுவனங்கள் அவசியம் தேவை.
ராகம் ஆடியோஸ் வெளியிடும் அரசகுலம் மட்டுமின்றி அனைத்து படங்களுமே வெற்றி பெற வாழ்த்துவோம்.

Share.

Comments are closed.