‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’

0

Loading

CT8A9045
தரமான வெற்றி திரைப்படங்கள் மூலம்  விநியோக துறையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை பதித்து இருப்பவர் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ். இவர் தற்போது  ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம் மூலம் முதல் முறையாக தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ‘ராஜ தந்திரம்’ புகழ் வீரா நடிக்கும் இந்த  ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் அவினாஷ் ஹரிஹரன் (குறும்பட மற்றும் விளம்பர பட இயக்குநர்) இயக்கி வருகிறார்.  இந்த படத்தின் தலைப்பை ஒரு தனித்துவமான காணொளி மூலம் படக்குழுவினர் உருவாக்க, அதை சமீபத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டார். வெளியான சிறிது நேரத்திலேயே இந்த காணொளியும், படத்தின் தலைப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
“அரசியில் கதைக்களத்தில் உருவாகும் இந்த படம், முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியில் உருவாகின்றது. இன்றைய சூழ்நிலையில்  அனைவராலும் ஏற்று கொள்ளப்படும் இரண்டு சிறப்பம்சங்கள் – அரசியலும், நகைச்சுவையும் தான். அந்த வகையில் இந்த திரைப்படம் ரசிகர்களின் உள்ளங்களை நிச்சயமாக கவரும்.  எங்கள் படத்தின் கதாநாயகியை தேர்வு செய்யும் பணி தற்போது மும்மரமாக நடந்து கொண்டிருக்கின்றது.  மேட்லே ப்ளூஸ் இசையமைக்கும் இந்த படத்தில் பணியாற்றும் ஏனைய தொழில் நுட்ப கலைஞர்களை நாங்கள் விரைவில் முடிவு செய்துவிடுவோம். தன்னுடைய திறமையால், ஒரு வெற்றிகரமான விநியோகஸ்தராக திரையுலகில் கால் பதித்து இருக்கும்
‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ், இந்த படத்தின் நடிகர் நடிகைகளை தேர்வு செய்வதிலும், விளம்பர படுத்துவதிலும் பக்கபலமாய்  செயல்பட்டு கொண்டிருக்கிறார்.         எங்கள் படத்தின் தலைப்பை என்னுடைய வழிகாட்டி கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் வெளியிட்டிருப்பது, இந்த  ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’
படத்திற்கு கிடைத்த நல்லதொரு தொடக்கமாக கருதுகின்றேன்” என்று கூறுகிறார்  ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்தின் கதாநாயகன் வீரா.
 
 
Share.

Comments are closed.