அரசியல் கிரைம் திரில்லர் “ பழைய வண்ணாரப்பேட்டை “

0

 1,009 total views,  1 views today

_mg_5665 dsc_4912      

  கிருஷ்ணா டாக்கீஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்க, அனாமிகா பிக்சர்ஸ் இளையா.வி.எஸ் வெளியிடும் “ பழைய வண்ணாரப்பேட்டை “

இந்த படத்தில் பிரஜன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக அஷ்மிதா நடிக்கிறார். மற்றும் ரிச்சர்ட், நிஷாந்த், கருணாஸ், பாடகர் வேல்முருகன், காஜல், கானாபாலா, சேசு, மணிமாறன், ஆதித்யா, பரணி, கூல் சுரேஷ், ஜெயசூர்யா, ஜெயராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு  – பாருக் / இசை   –   ஜூபின் /  எடிட்டிங்   –  எஸ்.தேவராஜ்

கலை   –  பி.எ.ஆனந்த்   /  சண்டை   –  மிரட்டல் செல்வா

நடனம்   –  ஜானி  /  தயாரிப்பு   –  எம்.பிரகாஷ்

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி உள்ளார்  –  மோகன்.ஜி                                   

படம் பற்றி இயக்குனர் மோகன்.ஜி கூறியதாவது..                                                                               

இது ஒரு பொலிடிக்கல், கிரைம், திரில்லர் படம். பழைய வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் பிரஜனின் நண்பன் எதிர்பாராத விதமாக ஒரு கொலை சம்பவத்தில் குற்றவாளியாகிறான். அந்த கொலைக்கு பின்னால் அரசியல் சதி இருப்பதை கண்டுபிடித்து பிரஜன் தனது நண்பனை எப்படி காப்பாற்றினார் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே பழைய வண்ணாரப்பேட்டையில் தான் அங்கே நான் பார்த்து விஷயங்களில் உருவானதுதான் இந்த படம். எங்க ஏரியாவில் எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அதையே படமாக்கி இருக்கிறேன். உலகம் முழுவதும் எங்க ஏரியா பிரபலமாக தான் இந்த படத்தின் தலைப்பை “ பழைய வண்ணாரப்பேட்டை” என்று வைத்துள்ளேன் என்றார்.

இந்த படத்தில் நட்புக்கு ஒரு மரியாதையும், சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தும் இருந்தது அதனால் தான் இந்த படத்தை நான் வெளியிடுகிறேன் என்றார் அனாமிகா பிக்சர்ஸ் இளையா.வி.எஸ்.

இந்த படத்தில் ஜுபின் இசையில் வேல்முருகன் பாடிய “ உன்னத்தான் நெனக்கையில ராத்திரி தூக்கமில்ல “ என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி உள்ளது குறிப்படத்தக்கது.

Share.

Comments are closed.