‘அறம்’ படத்தை தந்த தயாரிப்பாளர் ராஜேஷின் அடுத்த படம்…

0

Loading

குறும் படங்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது என்பது சமீபத்திய ட்ரெண்ட். அந்த வகையில் சமீபமாக லட்சுமி, மா ஆகிய குறும் படங்கள் மூலம் அனைவரையும் ஈர்த்த இயக்குனர் சர்ஜுன்,   ஒரு தாய் அன்பின் வெளிப்பாடை  அற்புதமாக காட்டிய ‘Maa’ மூலம் அனைத்து தரப்பிலும் பெருமளவு பாராட்டுகளையும்  வாழ்த்துகளையும் பெற்று வருகிறார். இந்த வெற்றி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படத்தை  இயக்கம் வாய்ப்பை சார்ஜூனுக்கு பெற்றுத்தந்துள்ளது  என்பதே தற்பொழுதைய பரபரப்பு செய்தி. இந்த படத்தை ‘KJR ஸ்டுடியோஸ்’ ராஜேஷ் தயாரிக்கவுள்ளார். ‘அறம்’ என்ற தரமான படத்தை தந்தவர் ராஜேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த  ஒரு தரமான தயாரிப்பாளர்- திறமையான இயக்குனர்- உச்ச நட்சத்திரத்தின் கூட்டணி வணிக தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இயக்குனர் சர்ஜுன் பேசுகையில் , ”  வாய்ப்பு தேடி அலையும் இயக்குனர்களுக்கு  குறும்படங்கள் நல்ல பாதையாகும். எனது முதல் படமான ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கும் இந்நிலையில் எனது ‘Maa’ குறும்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் ‘KJR ஸ்டுடியோஸ்’ ராஜேஷ் சார் அவர்கள் எனக்கு போன் செய்து என்னிடம்  ஏதாவது சுவாரஸ்யமான கதையுள்ளதா என கேட்டார். உடனே நான் தயார் செய்துள்ள ஒரு கதையை அவரிடம் சொன்னேன். அது நயன்தாரா மேடமுக்காக என்பது எனக்கு அப்பொழுது தெரியாது. பிறகு அவர் என்னிடம்  இக்கதையை நயன்தாரா மேடமும் என்று கூறியபொழுது மிகவும் சந்தோஷப்பட்டேன். கதையை கேட்டு மிகவும் ரசித்தார்  நயன்தாரா மேடம். இது ஒரு உணர்ச்சிப்பூரமான திகில் படம். இந்த கதையை நான் எழுதிய பொழுது ஒரு பெரிய நடிகர் இதில் நடித்தால் மிக பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன். தற்பொழுது நயன்தாரா மேடம் போன்ற ஒரு உச்ச நட்சத்திரம் மற்றும் அருமையான நடிகர் கிடைத்திருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. எனது  ‘Maa’ குறும்படத்தை அவர் பார்த்ததாகவும் அதன் கதையும் மற்றும்  அதனை எடுத்த விதமும் அவருக்கு பிடித்திருந்ததாகவும் நயன்தாரா மேடம் என்னிடம் கூறினார். நயன்தாரா மேடமும் தயாரிப்பாளர் ராஜேஷ் சாரும்  என் மீதும் எனது கதையின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயம் ஒரு தரமான படத்தை தந்து காப்பாற்றுவேன்  ”.

Share.

Comments are closed.