Wednesday, March 26

அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் “என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா” .

Loading

சமீபமாக தென்னிந்திய திரை மொழிகளில் நடிக்கும் நடிகர்கள் தங்களது மொழி பிராந்தியத்தை தாண்டி , அடுத்த மாநிலங்களிலும்  தங்களது படங்கள் ஓட வேண்டும் என முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு திரை உலகில் கோலோச்சி வரும் அல்லு அர்ஜுன் தற்போது தமிழில் ” என் பெயர்  சூர்யா என் வீடு இந்தியா”  என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
தன்னுடைய அதிரடி நடிப்பினாலும், நடன திறமையாலும் தென்னிந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் ஒரு ராணுவ வீரனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அனு இமானுவேல். தமிழ் , தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஏராளமான பொருட்செலவில் தயாராகும்  இந்தப் படத்தில் சரத் குமார்,  action king அர்ஜுன்  ஆகிய இருவரும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாய் குமார், சாருஹாசன், ஹரிஷ் உத்தமன், பொம்மன் ஹிராணி, மற்றும் பல்வேறு  நடிகர்களுடன் நதியா மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
வி.வம்சி இயக்கத்தில், ராஜீவ் ரவி ஒளிப்பதிவு இயக்கத்தில், விஷால்- சேகர் இரட்டையர் இசை அமைக்க, ராஜீவன் கலை இயக்கத்தில், பா.விஜய் வசனம் மற்றும் பாடல்கள் இயற்ற , கே.நாகபாபு, பி.வாசு இணை தயாரிப்பில், லகடப்பாடி ஸ்ரீஷா ஸ்ரீதர் “ராமலெக்ஷ்மி சினி கிரியேஷன்ஸ் ” சார்பில் ” என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா” திரை படத்தை  தயாரிக்கிறார்.