சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ அனிருத் “
பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. தெலுங்கில் பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் “ அனிருத் “ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக காஜல்அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ரத்னவேலு / இசை – மிக்கி ஜே. மேயர்
இயக்கம் – ஸ்ரீகாந்த்
பாடல்கள் – கம்பம் கர்ணா, பாசிகாபுரம் வெங்கடேசன், அம்பிகா குமரன், திருமலை சோமு, முருகானந்தம், யுவகிருஷ்ணா, குலராஜா.
இணை தயாரிப்பு – சத்யசீத்தால, வெங்கட்ராவ்
தயாரிப்பு – பத்ரகாளி பிரசாத்
வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு – A.R.K.ராஜராஜா
படம் வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாக உள்ளது.