‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் 150வது படமான ‘நிபுணன்’ வரும் ஜூலை 28 அன்று உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. இது ஒரு கிரைம் திரில்லர் படமாகும். இப்படத்தில் பிரசன்னா, வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் சுருதி ஹரிஹரன் ஆகியோர் அர்ஜூனுடன் சேர்ந்து நடித்துள்ளனர் . டீஸர் மற்றும் ட்ரைலர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘நிபுணன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் இன்று நடந்தது. புதுமுக இசையமைப்பாளர் நவீன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இப்படப்பாடல்கள் மிக அருமையாக இருப்பதாகவும் , நிச்சயம் மக்களால் பெரிதும் ரசிக்கப்படும் என்று இப்படக்குழுவினர் கூறுகின்றனர். அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘நிபுணன் ‘ படத்தை ‘Passion Studios’ சார்பில் திரு.உமேஷ் , திரு. சுதன் சுந்தரம் , திரு. ஜெயராம் மற்றும் திரு. அருண் வைத்தியநாதன் இணைந்து தயாரித்துள்ளனர்.