846 total views, 1 views today
ஷாஜி கைலாஷ் இயக்கத்தில், பிரபாகர் வசனம் எழுத, ஆர்கே நீது சந்திரா, இனியா, கோமல் ஷர்மா, சுஜா வாருணி, ஆர் கே செல்வமணி, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்திருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.
கிட்டத்தட்ட இருநூறு திரையரங்குகளில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகிறது வைகை எக்ஸ்பிரஸ்.
அப்படம் வெளியாகும் முன்னமே தனது தயாரிப்பில் அடுத்த படத்தை தொடங்குகிறார் ஆர்கே.
மக்கள் பாசறை வழங்கும் அடுத்த படத்தை ஆர் கே நடிக்க ‘தண்ணில கண்டம்’ படத்தின் இயக்குனர் எஸ் என் சக்திவேல் இயக்குகிறார். எல்லாம் அவன் செயல், அழகர் மலை ஆகிய படங்களில் ஆர் கே -வடிவேலு காம்பினேஷன் கலக்கியெடுத்தது. இன்று வரை தொலைக்காட்சிகளில் ஆர் கே வடிவேலு நடித்த எல்லாம் அவன் செயல், அழகர் மலை படங்களில் இருந்து அதிகம் பார்த்து ரசிக்கும் காமெடியாக உள்ளது. இக்கூட்டணி வெற்றி பெற்ற கூட்டணியாக வலம் வந்தது.
இந்த கூட்டணி மீண்டும் “நீயும் நானும் நடுவுல பேயும் ” படத்துக்காக இணைகிறது.
காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது. வடிவேலு முழுக்க முழுக்க காமெடியில் கலக்கி எடுக்கும் கேரக்டரில் படம் முழுக்க வருகிறார். ஹீரோவுக்கு இணையான ரோலில் நடிக்க கடந்த வருடங்களில் மிக முக்கியமான இடத்தில் இருக்கும் நாயகியுடன் கதாநாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
எல்லாம் அவன் செயல் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராஜரத்தினம் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.
சென்னை, கேரளா, மற்றும் வெளிநாடுகளில் புத்தாண்டு தொடங்கி படப்பிடிப்பு நடைபெற உள்ளது.