‘ராக் ஸ்டார் டி எஸ் பி’ என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், தன்னுடைய வெற்றிகரமான அமெரிக்கா இசை பயணத்தை தொடர்ந்து, தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் உள்ள பல்வேறு நகரங்களில், மேலும் ஒரு பிரம்மாண்ட இசை பயணத்தை நடத்த இருக்கிறார். வருகின்ற மே மாதம் இறுதி வாரத்தில் தொடங்கி ஜூன் மாதம் வரை இந்த இசை பயணம் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள கே கே புரொடக்ஷன்ஸ் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்காவில் நடைபெற்ற தேவிஸ்ரீ பிரசாத்தின் நேரலை இசை நிகழ்ச்சியின் உரிமையை, ‘zee telugu’ தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா இசை பிரியர்கள் மத்தியில் டி எஸ் பிக்கு கிடைத்த அமோக வரவேற்பை ரசிகர்களுக்கு தெரியப்படுத்திய ஒரு நிகழ்ச்சி தான் – “DSP USA Tour World Premiere Event” . சிரஞ்சீவி, பிரபு தேவா, அல்லு அரவிந்த், அல்லு அர்ஜுன், ராகுல் ப்ரீத், லாவண்யா திரிபாதி, நாக சைதன்யா, அகில், சுகுமார், வம்ஷி பைடிபல்லி, ஹரிஷ் ஷங்கர் மற்றும் திரையுலகை சேர்ந்த பல பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியை முன் நின்று துவங்கி வைத்தனர். தெலுங்கு திரையுலகில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த இசை நிகழ்ச்சி கருதப்பட்டது மட்டுமின்றி, தொலைக்காட்சி மற்றும் இணையத்தள ரசிகர்களிடம் பெரும் பாராட்டுகளையும் பெற்றது. இந்த ஆண்டு அவர் நடத்த இருக்கும் இந்த விமர்சையான இசை பயணம் , நிச்சயமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் உள்ள டி எஸ் பி ரசிகர்களுக்கு மிக பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.