இசை வெளியீட்டு விழாவில் 100 நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிதியுதவி!

0

Loading

சிவா மனசில புஷ்பா… விரைவில் வரவிருக்கும் அரசியல் பரபரப்பு படம் இது. இந்தப் படத்தின்
இசை வெளியீட்டு விழா வரும் புதன் கிழமை சென்னையில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில்
கிட்டத்தட்ட தமிழ் திரையுலகின் அத்தனை முன்னணி பிரபலங்களையும் பங்கேற்க வைக்கும்
முயற்சியில் இறங்கியுள்ளார் படத்தின் இயக்குநர் – ஹீரோ – தயாரிப்பாளர் வாராகி.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சம், நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள 100 நலிந்த
கலைஞர்களுக்கு அந்த மேடையிலேயே கணிசமான நிதி உதவி வழங்குவதுதான். பெரிய தயாரிப்பாளர்கள், பெரிய பேனர் படங்களின் நிகழ்ச்சிகளில் கூட செய்யாத மிகப் பெரிய நிதி உதவி இது. தொகை எவ்வளவு என்பதை ஒரு சஸ்பென்சாக வைத்திருக்கிறார் வாராகி.

நிதி உதவியுடன் அவர்கள் அனைவருக்கும் பிரமாதமான அசைவ விருந்து அளிக்கவும்
தயாரிப்பாளர் வாராகி திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்.

பிப்ரவரி 7-ம் தேதி புதன்கிழமை மாலை பிரசாத் லேப் திரையரங்கில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜேகே ரித்தீஷ் இந்த நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராகப்
பங்கேற்று நிதி உதவியை வழங்குகிறார்.

Share.

Comments are closed.