‘இடுக்கண்’ குறும்படம்

0

 783 total views,  1 views today

5
பல தரமான குறும்படங்களை ரசிகர்களுக்கு வழங்கி, தென் இந்தியாவில் குறும்படங்களை விளம்பரம் செய்வதில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’, தற்போது ‘இடுக்கண்’ என்ற குறும்படத்தை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதி முகாம்களில் அடைப்பட்டு, எண்ணற்ற அவமானங்களையும், துயரங்களையும் சந்தித்து வரும் இலங்கை தமிழ் மக்களை பற்றிய குறும்படம் தான், இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர்  இயக்கி இருக்கும் ‘இடுக்கண்’.
தமிழகத்தில் இருக்கும் அகதி முகாம்களில் தங்கி இருக்கும் இலங்கை தமிழ் மக்கள் பலர் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்கின்றனர். அப்படி தப்பி செல்லும் போது அரசாங்கத்தால் பல முறை கைதும் செய்யப்படுகின்றனர். ஆனால் அதற்கான உண்மையான காரணம் என்ன என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கின்றது. எதனால் அவர்கள் தமிழகத்தில் அகதிகளாக வாழ விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தும் குறும்படம் தான் இந்த ‘இடுக்கண்’.

 

Share.

Comments are closed.